இஸ்லாமியக் குடும்பங்களுக்குஉதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவி வழங்கினார்

இஸ்லாமியக் குடும்பங்களுக்கு
உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவி வழங்கினார்

கொரோனா உரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரமிழந்து வாடும் தினக்கூலித் தொழிலாளர்களுக்கும் , ஏழை எளிய மக்களுக்கும் ,  நலத்திட்ட உதவிகள் திமுக சார்பில் வழங்கப்பட்டு வருகிறது , நேற்று மாலை சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம் .எல்.ஏ., தலைமையில், தயாநிதிமாறன் எம்பி முன்னிலையில் , துறைமுகம் சட்டமன்றத் தொகுதி - இராஜா அணாமலை மன்றத்தில்  இஸ்லாமியக் குடும்பங்களுக்கும் , அதனைத் தொடர்ந்து தூய சகாயமாதா தேவாலய வளாகத்தில் இஸ்லாமியக் குடும்பங்களுக்கும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  புனித ரமலான் திருநாளை முன்னிட்டு ரமலான் பரிசுப் பொருள்களாக 2 கிலோ பாஸ்மதி அரிசி , எண்ணெய், நெய் , சேமியா , மற்றும் பிரியாணி சமைப்பதற்குத் தேவையான பொருட்கள் , புத்தாடைகள் மற்றும் நிதியுதவியும் வாழங்கி- ராமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் . மேலும் , அன்னை தயாளு அம்பாள் தொண்டு நிறுவனத்தில் தையல் பயிற்சி முடித்த 2 இஸ்லாமியர் சகோதரிகளுக்கு தையல் இயந்திரமும் , கணினிப் பயிற்சி முடிந்த சகோதரி ஒருவருக்கு மடிக்கணினியும் வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் தூய சகாயமாதா தேவாலய பங்குதந்தை சிற்றரசு, துறைமுகம் சட்டமன்றத் தொகுதிப்பு உட்பட்ட பகுதி , வட்ட நிவாகிகள் , இளைஞர்அணி அமைப்பாளர்கள் நுணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Comments