அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் களப்பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் 
களப்பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்
திருவொற்றியூர்,ஜூன்.24,
திருவொற்றியூர் மண் டலத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இங்கு பணியாற்றும் 485 களப்பணியாளர்களுக்கு  தெர்மல் ஸ்கேனர் , ஆக்சிஜன் கண்டறியும் கருவி , கபசுர குடி நீர் வழங்கும்  நிகழ்ச்சி மண்டல அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது . இதில் , அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் , களப்பணியாளர்களுக்கு கருவிகளை வழங்கினார் . பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது : திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு அதிகாரியாக மூத்த ஐஏ எஸ் அதிகாரி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார் . இவரது மேற்பார்வையில் 485 களபணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமும் சுகாதார பணி யாளர்கள் வீடு வீடாக சென்று , பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர் . மைக்ரோ லெவல் திட் டத்தின்படி , தொற்றுள்ள பகுதியில் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக களப்பணியாளர்கள் சென்று காலை 7.30 மணிக்கு பணிகளை தொடங்குகின்றனர் .
இவ்வாறு அவர் கூறினார் . நிகழ்ச்சியில் , முன்னாள் எம்எல்ஏ கே . குப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

Comments