பாஜக அலுவலகத்தில் கு.க.செல்வத்தத்திற்கு உற்சாக வரவேற்பு

பாஜக அலுவலகத்தில் கு.க.செல்வத்தத்திற்கு உற்சாக வரவேற்பு
சென்னை,ஆக.6,
திமுகவின் தலைமை நிலைய அலுவலகச் செயலாளரும் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான கு.க.செல்வம்  தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுடன் டெல்லிக்கு சென்று, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, கு.க.செல்வத்தை திமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.  
இதனை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம்  சென்னை, தி.நகரில் உள்ள தமிழக பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவருக்கு பாஜக நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “மோடி, ஜே.பி.நட்டா மற்றும் முருகன் ஆகியோருக்கு நன்றி. நான் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர்களிடம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு மின் தூக்கி கேட்டேன்.  திமுக உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். கடவுள் முருகனை பற்றி தவறாக பேசியவர்களை திமுக தலைவர் கண்டிக்க வேண்டும். கட்சியை விட்டு நீக்கினாலும் எனக்கு கவலை இல்லை. தமிழகத்தில் வாரிசு அரசியல் மாறி குடும்ப அரசியல் நடக்கிறது” என்றார். 
தமிழக பா.ஜ.க. பொது செயலாளர் கே.டி.  ராகவன், மாநில விவசாய அணி துணை தலைவர் முத்துராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Comments