பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்
சென்னை : பாரத பிரதமர் மோடி அவர்களின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க.மத்திய சென்னை மேற்கு மாவட்ட எஸ்.சி.அணி சார்பில் மத்திய சென்னை எஸ்.சி அணி மாவட்ட துணைத் தலைவர் என்.கரிகாலன் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு
இலவச மருத்துவ காப்பீடு வழங்கும் நிகழ்ச்சி டி.பி.சத்திரம் பகுதியில் நடைப்பெற்றது.
இதில் பா.ஜ.க.மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் என்.தனசேகர் அவர்கள் தலைமை வகிக்க மாநில பொது செயலாளர்
கரு.நாகராஜன், மாநில எஸ்.சி. அணி பொதுச் செயலாளர் என்.எல்.நாகராஜ் மற்றும் எஸ்.சி.அணி மாநில துணைத் தலைவர் ம.கபிலன் ஆகியோர்
சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு மக்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் மற்றும் எழும்பூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் எஸ். பிரசாத், எஸ்.சி அணி மாவட்டத் தலைவர் அரவிந்தன், இளைஞரணி மண்டலத் தலைவர் வி.ஜெய்சங்கர், அண்ணாநகர் கிழக்கு மண்டல தலைவர் ம.கோகுலன், பிரிச்சார பிரிவு மாவட்டச் செயலாளர் எஸ்.காமேஷ்வரன் மற்றும் கலை, கலாச்சார பிரிவு மாவட்டத் தலைவர் மாயசக்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
Comments
Post a Comment