எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில்மத்திய அரசு அலுவலகம் முற்றுகை போராட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில்
மத்திய அரசு அலுவலகம் முற்றுகை போராட்டம்


விவசாய விரோத 3 சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும்,  விவசாயிகளுக்கு எதிராகவும் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் செயல்படும் மத்திய அரசை கண்டித்தும், சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், பஷீர் சுல்தான் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜுனைத் அன்சாரி, தென்சென்னை மாவட்ட தலைவர் சலீம், வடசென்னை மாவட்ட தலைவர் ரஷீத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
விவசாயிகள் மற்றும் எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களையும் நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு நிறைவேறியுள்ளது.
இந்த சட்ட வரைவுகளில் உள்ள குறைகளை தேர்வு குழுவுக்கோ அல்லது நிலைக் குழுவுக்கோ அனுப்பி ஆராயாமல், எந்தவித திருத்தங்களும் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியுள்ளது.
இந்த சட்டங்கள் மாநில அரசின் சந்தைப்படுத்தல் உரிமை, கொள்முதல் உரிமை, பதுக்கலை தடுக்கும் உரிமை போன்றவற்றை தட்டிப் பறிக்கின்றன. அதுமட்டுமின்றி மாநிலங்களின் வரி வருவாயை மத்திய அரசு பறித்துச் செல்லும் நிலை உருவாகும்.
இவ்வாறு கூறினார்.

Comments