தமிழக சட்டசபையை பாஜக உறுப்பினர்கள் அலங்கரிப்பார்கள் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேச்சு

 தமிழக சட்டசபையை பாஜக உறுப்பினர்கள் அலங்கரிப்பார்கள் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேச்சு
அம்பத்தூர் , செப் .26, இன்னும் 5 மாதத்தில் தமிழக சட்டசபையை பாஜக உறுப்பினர்கள் அலங்கரிப்பார்கள் என அம்பத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பேசினார்.
 சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அம்பத்தூரில்   நடைபெற்றது . விழாவுக்கு மாவட்ட தலைவர் சென்னை சிவா தலைமை தாங்கினார். நெசவாளர் பிரிவு மாநிலச் செயலாளர் மின்ட் எம்.ரமேஷ்  சாக்லேட் மாலை அணிவித்து பின்பு வெள்ளி வேல் கொடுத்து கௌரவித்தார்.
கூட்டத்தில் மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது : பிரதமர் மோடி பிறந்த நாளை தமிழக பாஜக சார்பில் சேவை வாரமாக தமிழகம் முழுவதும் கடைப்பிடித்து வருகிறோம் . மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளோம் . கொரோனா என்ற வைரஸ் உலகம் முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்த வைரஸ் இந்தியாவிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார வல்லுனர்கள் கணித்தார்கள் . ஆனால் , நமது பாரத பிரதமர் மோடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் கட்டுப்படுத்தி உள்ளார். மேலும் , வைரசால் இறப்பு விகிதமும்
குறைந்துள்ளது . 
எங்களது தொண்டர்கள் ஒவ்வொருவரும் உயிரை துச்சமாக மதித்து தொற்று காலத்தில் மக்கள் நக்காக சேவை செய்தார்கள் . இன்னும் ஐந்து மாதங்களே உள்ளது . வருகின்ற சட்டமன்ற தேர்தலில் என்னுடைய சகோதரர் , சகோதரிகள் , எங்களது உறுப்பினர்கள் , தமிழக சட்டசபையை அலங்கரிப்பார்கள் . அது நிச்சயமாக 5 மாதத்தில் நடக்கும் . வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சட்டசபைக்கு பாஜக உறுப்பினர்களை அனுப்பியே தீருவோம் என முடிவு எடுப்போம் . இவ்வாறு அவர் பேசினார் .

Comments