3% உள் ஒதுக்கீடு வழங்க வேன்டும்சலவைத் தொழிலாளர்கள் வேண்டுகோள்

3% உள் ஒதுக்கீடு வழங்க வேன்டும்
சலவைத் தொழிலாளர்கள் வேண்டுகோள்
சேப்பாக்கம் : அக்,29
தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு சென்னை நிருபர்கள் சங்கத்தில்மாநில தலைவர் இரா.சுப்பிரமணியன் மற்றும் மாநில பொதுசெயலாளர் சே.சக்கரை ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
செய்தியாளர் சந்திப்பின்போது கொரோனா தொற்று பரவல் காலத்தில் சிறப்பாக செயல்பட்ட, செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எங்கள் (சலவை தொழிலாளர்)சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற 3% உள் ஒதுக்கீடு வழங்க வேன்டுமென 25 லட்சம் சலவைத் தொழிலாளர்கள் சார்பில் கேட்டுகொள்கிறோம் என தெரிவித்தார்.
மேலும் அனைத்து மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலகத்திலும் எங்கள் தொழிலாளர்கள் இலவச வீட்டு மனை பட்டா,தையல் இயந்திரம் ,நடமாடும் சலவையகம் அமைக்க மானியத்துடன் கூடிய கடன் பெற விண்ணப்பம் செய்திருந்தும் இதுவரை முறையாக பெற முடியவில்லை.அதிகாரிகள் தரப்பில் சரியான பதிலும் தருவதில்லை எனவும் கூறினார்.
இதன் பிறகு தமிழகத்தில் புதிரை வண்ணார் நல வாரியம் O சான்று வழங்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.

எனவே தமிழக அரசு சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் எங்களை போன்ற மிகவும் நலிவுற்ற வகுப்பை சார்ந்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்மெனவும்,

அனைத்து மாவட்ட நகரங்களிலும் தலா ஒரு கூட்டுறவு பவர் லாண்டரி அமைத்திட வேண்டுமென மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சிகளில் எங்களது கோரிக்கையை ஏற்று சலவை கூடம் கட்டித்தர வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம் என தெரிவித்தார்
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது அதன் தலைவர் இரா.சுப்பிரமணியன்,பொது செயலாளர் சே.சக்கரை,துணை பொது செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்

Comments