சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது நடவடிக்கை தேவை
எஸ்.கே. சாமித் தேவர் ஜி வலியுறுத்தல்
சென்னை, அகில இந்திய தேவரின பாதுகாப்பு படை தலைமை சட்ட ஆலோசகர் Dr. எஸ்.கே. சாமித் தேவர் ஜி கூறியதாவது,
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்து கொண்டு தமிழ்நாடு மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தில் உள்ள அக்கறை காரணமாக இந்து மக்கள் பாதுகாப்பு படை என்ற அமைப்பை பதிவு செய்யப்பட்ட தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் ஒரு அங்கமாக உருவாக்கி பல்வேறு நற்காரிய பணிகளை செய்து வருகிறேன்.
சமூகத்தில் சாதிய மோதலை உண்டு பண்ணும் நோக்கில் திட்டமிட்டே ஆபாச படங்களை பகிர்வது உள்ளிட்ட சமூக விரோத வேலைகளைச் செய்து வருகிறார்கள் . மேற்படி நபர்களின் சமூக விரோத நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக பலர் அக்குழுவில் இணைந்து செயல்படுகின்றனர் . இவர்கள் அனைவரும் தென்தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்பில் இருந்து கொண்டும் திட்டமிட்டே செயல்படுகிறார்கள் என்பதும் தெரியவருகிற காரணத்தால் மேற்படி சமூக விரோதிச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் பேச்சுக்களை கவனித்து பார்த்ததில் அவர்களில் பெரும்பாலோர் தென்தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெளிவாக தெரிகிறது.
ஜாதி தலைவர்கள் பலரின் புகழுக்கும் மற்றும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர்களின் புகைப்படத்தையும் அவதூறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது , திட்ட மிட்டு குறிவைத்து புகார்தாரரான எனது புகழுக்கும் மற்றும் நற்பெயருக்கும் தேவரின சமுதாய மக்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் சூழ்ச்சி செய்து கலங்கம் ஏற்படுத்தியுள்ளது . எனக்கு உயிர் பயத்தையும் மற்றும் மன உளைச்சளையும் தர வேண்டும் என்ற கெட்ட உள்நோக்கத்தோடு எனது புகைப்படங்களை ஆபாசமாக வெளியிடுவது , கூட்டுச் சேர்ந்து கொலை மிரட்டல் விடுவது , ஜாதிகலவரத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டாக சேர்ந்து சதிதிட்டமிட்டம் தீட்டி ஜாதி வெறியை தூண்டும் வகையில் பேசுவது , பெண்களை கேலி கிண்டல் செய்துவதோடு மட்டுமல்லாமல் பெண்கள் படத்தை வைத்து அவர்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு அவர்களுக்கெதிராக வன்கொடுமை செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment