முற்றுகை போராட்டம்
சென்னை,அக்.23,
இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது.
மாநிலத் தலைவர் தடா ஜெ.அப்துல் ரஹிம் தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
சுமார் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள கோவை பாஷா பாய் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் மோசமான நிலையில் உள்ளார் . ஆகையால் தமிழக அரசு 78 வயதான கோவை பாஷா பாயை உடனே விடுதலை செய்ய வேண்டும் . சமீபத்தில் கூட தமிழக அரசு சுமார் 1000 க்கும் மேற்பட்ட ஆயுள் கைதிகளை விடுதலை செய்தது அதில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற சுமார் 3 பேரையும் விடுதலை செய்தது . ஆனால் முஸ்லிம் சிறைவாசிகள் ஒருவரையும் விடுதலை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . " எங்களது கோரிக்கையை ஏற்று பாஷாபாய் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது .
Comments
Post a Comment