இந்து திராவிட மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்
சென்னை,அக்.25,
இந்து திராவிட மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் சென்னை , குரோம்பேட்டை B.L. Party Hall- ல் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது . தீர்மானம் -1 இந்து திராவிட மக்கள் கட்சி சார்பாக வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை சந்திப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . தீர்மானம் -2 தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களிலும் , இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்களிலும் காவிக் கொடி ஏற்றக்கோரியும் , இந்து சமய அறநிலையத்துறையில் இந்து அல்லாத இஸ்லாமிய , கிறிஸ்தவ மதத்தினரை முற்றிலுமாக தவிர்க்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
தீர்மானம் - 3 கோவை மத்திய சிறையில் , கோவை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாலிகளான இஸ்லாமிய பயங்கரவாதிகள் உள்ள நிலையில் கோவை சிறை முற்றுகை என பயங்கரவாதி சக்திகள் அறிவித்துள்ளன . எனவே கோவை மத்திய சிறையில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகளை டெல்லி , திகார் சிறைக்கு மாற்றக்கொரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
தீர்மானம் - 4 தமிழகத்தின் 1000 - ம் ஆண்டுகள் வரலாற்று சிறப்புமிக்க தமிழ் கலாச்சார மாமன்னர் திரு . இராஜராஜ சோழர் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நினைவு மணிமண்டபம் அமைத்திடவும் , பிரமாண்ட சிலை அமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
..தீர்மானம் - 5 தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கிறிஸ்தவ இஸ்லாமிய மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை அனைத்து இந்து மாணவர்களுக்கும் வழங்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . தீர்மானம் -6 தமிழக கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் ரத்து செய்தார் . அதேபோன்று இப்பொழுது உள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் திரு . எடபாடி K. பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் , சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . தீர்மானம் -7 இந்து திராவிட மக்கள் கட்சியின் முதல் மாநில மாநாடு வருகின்ற 2021 பிப்ரவரி மாதம் நடத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . தீர்மானம் -8 விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு விழாவாக ஏற்று தமிழக அரசு நடத்திட இந்து திராவிட மக்கள் கட்சி சார்பாக தமிழக அரசை வளியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
Comments
Post a Comment