தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனுடாக்டர். எஸ் கே சாமி வழங்கினார்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனு
டாக்டர். எஸ் கே சாமி வழங்கினார்

 சென்னை,அக்.28, பொது மக்களின் நலன் கருதி பல முக்கிய கோரிக்கைகளை வருகிற சட்டமன்ற தேர்தல் 2021 ல் அமல்படுத்துவது குறித்து தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞருமான டாக்டர். எஸ் கே சாமி கொடுத்த கோரிக்கை மனு குறித்து நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் இந்திய தேர்தல் ஆணையருக்கு கடிதம்.

*வருகிற 2021 தமிழக சட்ட மன்ற தேர்தலில் பொது நலன் கருதி கீழ்கண்ட சில முக்கிய கோரிக்கைகளை அமல்படுத்துவது சம்பந்தமாக  மனு அளிக்கப்பட்டது.* 
1. 2021 சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள வேட்பாளர்களுக்கு ஏன் குறைந்த பட்ச கல்வித் தகுதியை நிர்ணயம் செய்யக் கூடாது?
மக்களின் பிரச்சினை என்னவென்று புரிந்து கொண்டு அதை சட்ட மன்றத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளதால் குறைந்த பட்ச கல்வித் தகுதி +2 மற்றும் அதற்கு மேல் நிர்ணயம் செய்யலாமே! 
மேலும் இதை இந்திய தேர்தல் ஆணையம் அமுல்படுத்துவதால் இம் மாநிலத்தில் கிராம புற மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டு கல்வி கற்போரின் சதவீதம் கணிசமாக ஏற வாய்ப்பும் அதிகமாக உள்ளது. 
2. ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேட்டை கட்டுப்படுத்தும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் என்பவர் ஒரே ஒரு முறை மட்டுமே வாய்ப்பு வழங்கும்படி தேர்தல் ஆணையத்தின் விதிகளில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும். 
3.கொடூர குற்றங்கள் புரிந்தோர் மற்றும் கொடூர குற்றங்களில் தண்டனை பெற்றோர் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்க நடவடிக்கை எடுக்கலாமே? 
4. 234 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஓட்டுக்கு பணம் தருவதை கட்டுப்படுத்தவும், படித்த சமூக நலனில் அக்கறையுள்ள இளைஞர்களை அரசியல் சேவைக்கு வருமாறு ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து சட்ட மன்ற தொகுதிகளிலும் ஒரு பிரதிநிதியை சுயேட்சையாக நிறுத்தினால் அவர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லாத சுயேட்சை வேட்பாளர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்படும் பல சின்னங்களில் (free Symbol) ஏதாவது ஒன்றை 234 பேருக்கும் ஒதுக்கீடு செய்து தர முடியுமா? 
5. ஒரு வேளை வருகிற 2021 சட்ட மன்ற தேர்தலில் தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் அதிகமானோர் வெற்றி பெற்று பெரும்பான்மை வேட்பாளர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அவர்களில் ஒருவரை அவர்கள் தேர்ந்தெடுத்து முதல்வராக்கி ஆட்சி அமைக்க முடியுமா? 
6. சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் கடைபிடிக்க வேண்டிய அல்லது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன? 

உள்ளிட்ட மேலே கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உயர்திரு. சத்தியபிரதா சாகு  இ. ஆ. ப அவர்கள் மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

Comments