பட்டாசு வெடிக்க தடையை நீக்கவேண்டும்தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை கோரிக்கை

பட்டாசு வெடிக்க தடையை நீக்கவேண்டும்
தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை  கோரிக்கை

சென்னை, அக்.29, தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை  தலைமை ஒருங்கிணைப்பாளர்  மு.அருண்குமார், 
இந்த வருடம் தீபாவளி நவம்பர் 14 அன்று அனைவராலும் கொண்டாடப்பட இருக்கின்றது . கடந்த சில வருடங்களாக பட்டாசு வெடிப்பதற்கு கால நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிட்டிருந்தது . அதனால் , பட்டாசு தொழிலை நம்பி இருந்த பல இலட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுளனர் . மேலும் , இதை நம்பி இருக்கும் வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஏற்கனவே , கொரோனா நோய் காலத்தால் வணிகம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது . மேலும் , பண்டிகை கால வியாபாரத்தை நம்பி பல இலட்சம் தொழிலாளர்கள் உள்ளனர் . எனவே , மாசு கட்டுப்பாடு என்ற போர்வையில் வணிகத்தை கட்டுபடுத்தும் கார்ப்பரேட் முயற்சியினை எங்களது பேரவை முழு மூச்சாக எதிர்கின்றது . பட்டாசு வெடிப்பதினால் ஏற்படும் மாசு என்பது மற்ற தொழிற்சாலைகளினால் ஏற்படும் மாசு அளவை விட குறைவானது . எனவே , இதனை மனதில் கொண்டு அரசாங்கம் இந்த தடையை இனி மேல் விதிக்க கூடாது என்ற கோரிக்கையை எங்களது பேரவை இன்று முதல் ஆரம்பிக்க உள்ளது . அதன் முதல் படியாக இன்று சூளைமேட்டில் நூற்றுக்கு மேற்பட்ட வணிகர்கள் கூடி அரசுக்கு கோரிக்கை வைக்க உள்ளோம் . இது நிறைவேறாத பட்சத்தில் , சாகும் வரை உண்ணாவிரம் இருக்க முடிவு செய்துள்ளோம் . தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை தொடருமானால் ஜனவரி 1 - க்கும் இந்த தடை நீடிக்குமா ? என்று அரசு விளக்கம் அளிக்க வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.

Comments