இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பிரான்ஸ் தூதரகம் முற்றுகை


இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக
பிரான்ஸ் தூதரகம் முற்றுகை 
சென்னை, உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களின் உயிரைவிட மேலானவராகவும் , ஏனைய பிற சமயத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களால் பெரிதும் மதிக்கப்படக் கூடிய மாமனிதரான நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களை இழிவாகவும் , கேலி சித்திரம் வரைந்தும் தொடர்ந்து அவமரியாதை செய்துவரும் சார்லி ஹெப்டோ என்கிற நையாண்டி பத்திரிகையின் கீழ்த்தரமான செயலை ஆதரித்து , இஸ்லாத்தை பயங்கரவாதத்தோடு தொடர்புபடுத்தி தொடர்ந்து அவதூறு பேசி வருகின்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானை வன்மையாக கண்டித்து  சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டுத் தூதரகத்தை ( Breau of France ) இந்திய தவ்ஹீத் ஜமாஅத் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது . சென்னை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் அதன் தலைவர் எஸ்.எம் . பாக்கர் கண்டன உரை நிகழ்த்தினார் . மாநில நிர்வாகிகளான முஹம்மது முனீர் , முஹம்மது ஷிப்லி , பிர்தவ்ஸ் , அபு ஃபைஸல் , தக்வா மொய்தீன் , இனாயத்துல்லாஹ் , கலிமுல்லாஹ் , காஞ்சி ஜாஹிர் உசேன் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் உள்பட ஆண்களும் , பெண்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரான்ஸ் அதிபர் மெக்ரான் மற்றும் சார்லி ஹெப்டோ பத்திரிகைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர் . 


Comments