ஐ பைக் பிரியாணி புதிய கிளை


சென்னையில் ஐ பைக் பிரியாணி புதிய கிளை

சென்னை, நவ.20, சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் துரைபாக்கம் பிடிசி பஸ் ஸ்டாப் அருகில்   ஐ பைக் " பிரியாணி கிளை திறக்கப்பட்டுள்ளது.
சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த மதுரையில் சுவைமிக்க பிரியாணிக்கு புகழ்பெற்ற " ஐ பைக்" பிரியாணி சென்னையில் தடம் பதித்துள்ளது.


" ஐ பைக்" புதிய கிளையினை திரைப்பட நடிகர்,ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி எம்.பி,எஸ்.ஆர்.பி. குரூப் ஆப் கம்பெனி சேர்மன் அருண்லால் ஷெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர்.


ஐ பைக் பிரியாணி நிர்வாக இயக்குனர் அரவிந்த் கூறுகையில்..
மதுரையில் பைபாஸ்,அண்ணாநகர்,கே.கே.நகர்,வில்லாபுரம் பகுதிகளில் கிளைகளைக் கொண்டிருக்கும் "ஐ பைக் "பிரியாணி சென்னையில் முதல்முறையாக கிளை திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

"ஐ பைக் "பிரியாணி திறப்பு விழாச் சலுகையாக ஒரு சிக்கன் பிரியாணி (ரூ.170) வாங்கினால் கிரில் சிக்கன் இலவசம்,இரண்டு ஸ்வர்மா(ரூ.90)  வாங்கினால் ஒரு ஸ்வர்மா இலவசம், ஃபார்பிக்,கிரில் சிக்கன் (ரூ.190) வாங்கினால் ஸ்வர்மா இலவசம்.இச்சலுகை இம்மாதம் 30ந்தேதி வரை வழங்கப்படுகிறது.
நல்ல உணவுகளுக்கு அமோக ஆதரவளிக்கும் சென்னை மக்கள் " ஐ பைக்" பிரியாணிக்கும் வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.


Comments