புதிதாக உருவாகி உள்ள வலுவான காற்றழுத்த பகுதியை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் ! அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி
புதிதாக உருவாகி உள்ள வலுவான காற்றழுத்த பகுதியை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் ! அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி
சென்னை , நவ.30, தற்போது புதிதாக உருவாகி உள்ள வலுவான காற் நழுத்தப்பகுதியை உன்னிப் பாககவனித்து வருகிறோம் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார் . சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார் . அப்போது அவர் கூறியதவாது : ஒவ்வொரு ஆண்டும் புயல் சின்னங்களை எதிர் கொள்ள தமிழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது . நிவர்புயலுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து புதிய வரலாற்றை அரசு படைத்துள்ளது . உயிர்சேதம் , பொருள் சேதம் ஏதும் ஏற்படாமல் , மக்களைகாக்கும் ஒரு முன் மாதிரியான நடவடிக்கை அரசு மேற்கொண்டு உள் ளது . இயல்பான மழை 302.6 விட , 301.8 மட்டுமே பதிவாகி உள்ளது . இது இயல்பைவிட 14 சதவீதம் குறைவு . அதீத மழை பெய்யும் போது வல்லரசு நாடுகளில்கூட தண்ணீர்தேங்கும் . தென்கிழக்கு வங்ககடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி , ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ) மண்டலமாகமாறியுள்ளது . சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள நீரைவெளியேற்ற அனைத்து விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இயல்பை விட அதிகமான அளவு . 16 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான அளவு மழை பதிவாகியுள்ளது . வலுவான காற்றழுத்த பகுதியை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் . முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையின் பேரில் துரிதமான நடவடிக்கைகளை தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் . இவ்வாறு அவர் கூறினார் .
Comments
Post a Comment