சாதி சான்றிதழ் கிடைப்பதில் சிரமம் வேட்டைக்காரர் சமூதாய மக்கள் புகார்
சென்னை,வேட்டைக்காரர் நாயக்கர் வேட்டுவ கவுண்டர் இன நலச்சங்கம் செயலாளர் M. வேதாச்சலம் கூறியதாவது, வேட்டைக்காரர் , வேட்டைக்காரர் நாயக்கர் என்ற சமுதாயத்தை சார்ந்த மக்கள் திருவண்ணாமலை , விழுப்புரம் , வேலூர் , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிகுதியாகவும் , மற்ற மாவட்டங்களில் பரவலாகவும் வசித்து வருகிறார்கள் . இவர்கள் பெரும்பாலும் கிராமங்களை சார்ந்தே வசித்து வருவதால் கல்வி , பொருளாதாரத்தில் பின்தங்கியே உள்ளனர் .
மேலும் இவர்களுக்கு தமிழக அரசு 8.3.2019 - ல் அறிவித்துள்ள DNT சான்றிதழ் கிடைப்பதில் சிரமமாக உள்ளது . அதனை ஒருசிலர் சாதகமாக பயன்படுத்தி இந்த சமுதாய மக்களுக்கு அட்டவணை பழங்குடி சான்றிதழ் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பண ஆதாயம் பெருகின்றனர் . நீங்கள் இந்த அட்டவணை பழங்குடி சான்றிதழ் வாங்கினால் மிக எளிதில் அரசாங்க வேலையில் சேரலாம் என்று கூறி அவர்களை இணைத்து போராட தூண்டுகிறார்கள் . மேலும் மேற்கண்ட சமூதாக மக்கள் அட்டவணை பழங்குடி சான்றிதழ் வாங்கி வேலையில் சேர்ந்தால் ஏற்படும் . பின்விளைவுகளை யோசிக்காமல் , சமுதாயத்தின் பெயரை மாற்றி அட்டவணை பழங்குடி சாதி சான்றிதழ் வாங்க நாங்கள் அட்டவணை பழங்குடிகள் தான் என்றும் , எங்களுக்கு சாதி சான்றிதழ் கிடைப்பதில் சிரமமாக உள்ளது என்றும் பத்திரிக்கைகளுக்கும் , உண்மையிலையே அட்டவணை பழங்குடியினர்களாக இருந்து அவர்களுக்கு சாதி சான்றிதழ் கிடைத்து அவர்கள் பயன் பெறுவார்களேயானால் எங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை . மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பொய் சொல்லி தங்கள் சமுதாயத்தை மறைத்து அட்டவணை பழங்குடி சாதி சான்றிதழ் பெற்றால் அட்டவணை பழங்குடி மக்களின் உரிமைகளை மீறுவதாகும் .
Comments
Post a Comment