கஞ்சம்ரெட்டி மக்களுக்கு சாதிசான்றிதழ் காலதாமதம் இன்றி வழங்க வேண்டு ரெட்டி இளைஞர் பேரவை கோரிக்கை


 கஞ்சம்ரெட்டி மக்களுக்கு சாதிசான்றிதழ் காலதாமதம் இன்றி வழங்க வேண்டும்
ரெட்டி இளைஞர் பேரவை கோரிக்கை

சென்னை, டிச.13, ரெட்டி இளைஞர் பேரவை பொதுச்செயலாளர் வீ.செல்வராஜு கூறியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள 40 லட்சம் ரெட்டியார்கள் அனைவரும் மொழி சிறுபான்மை இனத்தைச் சேர்த்தவர்கள் முழுக்க , முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் .ஓ.பி. இராமசாமி ரெட்டியார் அவர்களின் படத்தை சட்டமன்றத்தில் திறக்க போவதாக அறிவித்த மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே . பழனிச்சாமி அவர்களுக்கு 40 லட்சம் ரெட்டியார் மக்கள் சார்பில் முதலில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் . ஓ.பி.ஆர் அவர்களின் முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கவேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கை . ஆனால் பசிக்கு அழுகின்ற குழந்தைக்கு மிட்டாய் தருவது போல இந்த அரசு எங்களின் கோரிக்கையை கண்டும் , காணாமல் கைகழுவிட்டிருக்கிறது . எனவே உடனடியாக உத்தமர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலையை வரும் 2021 பிப்ரவரி முதல் தேதி அவரின் பிறந்த நாளைக்கு முன்னதாக நிறுவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம் . மேலும் நிலுவையில் உள்ள கோரிக்கைகள் ,
கொண்ட ரெட்டி , கொண்ட காப்பு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்
32 உட்பிரிவைக் கொண்ட ரெட்டியார்கள் , இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறோம் . இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பழங்குடியியப் பட்டியலில் கொண்ட ரெட்டி கொண்டகாப்பு " என்பவர்கள் இடம் பெற்றுள்ளனர் . அவர்களுக்கு தமிழக அரசு  பாதுகாப்பு வழங்க வேண்டும் .


பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கஞ்சம்ரெட்டி மக்களுக்கு சாதிசான்றிதழ் காலதாமதம் இன்றி வழங்க வேண்டும். பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள அயோத்தி ரெட்டி , கோட்டை ரெட்டி , போகநாட்டு ரெட்டி , தேசூர் ரெட்டி , பொன்கலைநாட்டு ரெட்டி உள்ளிட்டவர்கள் " ரெட்டி கஞ்சம் பிரிவை சேர்ந்தவர்கள் . இவர்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள் இவர்கள் தென்மாவட்டங்களில் எளிதாக தமக்குரிய சாதி சான்றிதழை பெற்று வரும் நிலையில் , தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் , பிற மாவட்டங்களிலும் அதற்கான சாதி சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கின்றனர் . இதனால் திருவண்ணமமலை , வேலூர் , காஞ்சிபுரம் , சேலம் , திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரெட்டி கஞ்சம் சாதி சான்றிதழ் கிடைக்காமல் மறுக்கப்பட்ட இளைஞர்கள் ஏராளமானவர்கள் அரசு முடியாமல் விரக்தியின் விளிம்பில் வாழ்க்கையில் காணப்படுகின்றனர் .

கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்த போது இரண்டு முறையும் , செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் ஒரு முறையும் மத்திய அரசுக்கு ரெட்டி கஞ்சம் பிரிவு மக்களை OBC பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்தனர் . 18.3.1998 ல் ஒரு முறையும் , 21.1.2015 ல் இரண்டாவது முறையும் மத்திய அரசால் எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது . இதனை மறுபரிசீலனை செய்து OBC பட்டியலில் சேர்க்க வேண்டும் .
OBC பட்டியலில் ரெட்டி கஞ்சம் மக்களை சேர்த்து விட்டோம் , இது வரைவு கடிதம் என ஒரு துண்டு சீட்டைக் காட்டி அடுத்த வாரம் இதற்கான அரசாணை வெளிவரும் என்று தற்போதைய பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் இரா.சீனிவாசன் அவர்கள் எங்கள் மாநாட்டில் பேசினார் . ஆனால் ஆண்டுகள் இரண்டு ஆயிற்று . எந்த அரசாணையும் வெளிவரவில்லை . இதுபோல் எல்லா வகையிலும் எங்கள் ரெட்டியார் சமுதாயம் ஏமாற்றப்பட்டும் , வஞ்சிக்கப்பட்டும் வருகிறது .  .

தமிழகத்தில் உயர்சாதி ஏழைகளுக்கான 10 % இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் .
உயர்சாதி என்கிற அடிப்படையில் ஓ.சி ( 0C ) என சில உட்பிரிவினர் அழைக்கப்படுகிறார்கள் . இவர்களில் உள்ள ஏழைகள் அனைவரும் உயர்கல்வி , வேலைவாய்ப்பு பெற முடியாமல் வாழ்ந்து வருகிறார்கள் . இந்த பிரிவில் உள்ள எழைகள் மத்திய அரசு அறிவித்துள்ள 10 % இடஒதுக்கீட்டை எதிர்பார்த்து தவிக்கின்றனர் . இந்தவிஷயத்தில் தமிழக அரசு முன்னுக்கு பின் முரணாக இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறது . இது மிகவும் வேதனைக்குரிய செய்தியாகும் . மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை என சான்றிதழ் வழங்கக்கூடாது என எந்தவித காரணங்களும் கூறாமல் கடந்த 04.06.2020 அன்று மாநில அரசு சுற்றறிக்கையை வெளியிட்டது . அதனை திரும்ப பெற வேண்டி எங்கள் அமைப்புகளில் ஒன்றான மூன்று மாநில ரெட்டி நலச்சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது . அதன்பின்னர் தான் EWS சுற்றறிக்கையை தமிழக அரசு கடந்த 9.7 .2020 அன்று திரும்பப்பெற்றது . இவ்விஷயத்தில் அரசின் நடவடிக்கைகள் எங்களுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது .

நியமன உறுப்பினர்கள் பதவிகளில் எங்களுக்கு பிரதிநித்துவம் வழங்கவேண்டும் :
தமிழக அமைச்சரவையில் பிரதிநித்துவம் இல்லை : கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அமைச்சரவையில் ரெட்டியார் சமுதாயத்திற்கு ஒருவருக்கு கூட இடம் அளிக்கப்படவில்லை . ( இடையில் ஓராண்டு பதவியில் இருந்தார் திரு.பாலகிருஷ்ண ரெட்டி ) ஆனால் கடந்த தி.மு.க ஆட்சியில் இரண்டு பேர் தமிழக அமைச்சராகவும் , ஒருவர் மத்தியிலும் மூன்று அமைச்சர்களை பெற்றிருந்த இந்த சமுதாயம் தற்போது பிரதிநிதித்துவம் இல்லாமல் தங்கள் குறைகளை , மனக்குமுறலை வெளியே சொல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள் .
பல்கலைகழகங்களில் துணைவேந்தர் பதவி வழங்க கோரிக்கை - தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 21 பல்கலைக்கழகங்களில் நியமன பதவியான துணைவேந்தர் பதவிகளில் தற்போது ரெட்டியார் சமூகத்தில் ஒருவர் கூட இல்லை . எங்கள் சமூகத்தவரில் பலருக்கு இதற்கு தகுதிகள் இருந்தும் நியமிக்கப்படவில்லை என்பது ஆட்சியில் உள்ளவர்களால் நாங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவே கருத வேண்டியுள்ளது .
டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் பதவி நியமனம் வழங்கவேண்டும் : - டி.என்.பி.எஸ்.சி. தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான ஆணையங்களில் கடந்த 10 ஆண்டுகளாக எங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை . இது மிகுந்த வேதனை அளிக்கிறது என்பதை பதிவு செய்கிறோம் . இவ்வாறு ரெட்டி இளைஞர் பேரவை பொதுச்செயலாளர் வீ.செல்வராஜு கூறினார்.

Comments