வைப்பு தொகைய திருப்பி தர வேண்டும்
மதுக்கூட ஒப்பந்ததாரர்கள் மனு
சென்னை,டிச.17, தமிழ்நாடு மதுக்கூட கட்டிட உரிமையாளர்கள், மதுக்கூட ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் டாஸ்மாக் மேலான்மை இயக்குனரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 17-03-2020 அன்று மூடப்பட்ட ( டாஸ்மாக் கடைக்களுடன் இணைந்த ) மதுக்கூடங்கள் இன்று வரை ( 17-12-2020 ) திறக்கப்படவில்லை . சுமார் 9 மாதக்காலமாக நாங்களும் எங்களால் இயன்ற வரை மதுக்கூடங்களை மூடிய நிலையிலேயே இத்தொழில் எவ்வித வருமானமின்றி எங்கள் மதுக்கூடங்களுக்கான கட்டிட வாடகை . அபரிமிதமான மின்கட்டணம் , எங்களை நம்பி இருக்கும் தொழிற்லாளர்கள் சம்பளம் போன்றவற்றிக்கு செலழித்து வருகின்றோம் .நாங்கள் மதுக்கூடங்களை நடத்தி தொழில் செய்யத்தான் தங்கள் நிறுவனத்திடம் ஏல ஒப்பந்தம் பெற்று முன் வைப்பு தொகையாக பல லட்சங்களை செலுத்தி உள்ளோம் .மதுக்கூடங்களை எப்போது திறக்க உத்தரவு வரும் என்று நாங்கள் தங்களிடம் பல தடைவ நேரிலும் கடிதம் மூலமாகவும் அறிய விரும்பினோம்.
மேலும் கடந்த 30-11-2020 அன்று தங்கள் அலுலவகம் முன் அனைத்து மடதுக்கூடம் திறப்பது பற்றி நல்ல செய்தி அறிவிப்பாக வரும் என்று கூறினீர்கள். ஆனால் இன்று வரை அப்படி ஏதும் அறிவிப்பு வரவில்லை இனியும் எங்களால் இத்தொழிலை நம்பி காத்திருக்க இயலததால் தயவு கூர்ந்து எங்கள் கட்டிடத்தில் இயங்கும் மதுக்கடைகளை காலி செய்து எங்களிடம் பெற்ற வைப்பு தொகையை உடனே திருப்பி தர வேண்டுமென்று கேட்கின்றோம் . இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment