அதிரடி குரல் அறக்கட்டளையின் சார்பாக அன்னதானம் விழா

அதிரடி குரல் அறக்கட்டளையின் சார்பாக
அன்னதானம் விழா 
சென்னை,ஜன.30,
அதிரடி குரல் தமிழ் மாத இதழ் மற்றும் அதிரடி குரல் அறக்கட்டளையின் சார்பாக ஆசிரியர் V.N.ஜெயகாந்த் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்ற 100வது வார அன்னதானம் விழா சிறப்பாக நடைபெற்றது. 
இவ்விழாவை இந்திய குடியரசு கட்சியின் தலைவர் DR.செ.கு.தமிழரசன் அவர்களும்,அ.இ.அ.தி.மு.க. விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் V.N.ரவி அவர்களும் வருகை தந்து விழாவை துவக்கி வைத்தனர். இவ்விழாவில் ரிப்போர்ட்டர் ப்ளாஷ் பாலாஜி, பத்திரிகையாளர் சங்க தலைவர்களும்,பத்திரிகை ஆசிரியர்களும், நிருபர்களும் மற்றும் நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments