தபால் வாக்கு
வாடகை வாகன உரிமையாளர்கள் கோரிக்கை
சென்னை,ஜன.30,
தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் மாநில பொது செயலாளர் செங்கொடி வேந்தன் ஜூட் மேத்யூ கூறியதாவது;-
இந்திய திருநாடு குடியாக பெற்று 72 ஆண்டு காலம் நிறைவுற்ற நிலையில் தனி அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் தேர்தல் அன்று தேர்தல் பணிக்காக பயன்படுத்தும் ஒப்பந்த லாரி , கார் , வேன் போன்ற வாடகை வாகன ஓட்டுனர்களின் வாக்கு உரிமையை உறுதி செய்ய தவறி உள்ளது .
சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக தேர்தல் அதிகாரி திரு சத்யபிரதா சாகுவிற்கு மின்னஞ்சல் வாயிலாக கோரிக்கை வழங்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தபால் வாக்கு அளிப்பது தொடர்பாக நேரில் சந்திக்க அனுமதி பெற்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்திலையில் தமிழக தேர்தல் அதிகாரி இது தொடர்பாக election commission of India secreatry Mr.shri malay malick புது டெல்லிக்கு அனுப்பப்பட்ட நிலையில் கிடப்பில் கிடக்கும் ஜனதாயக உரிமையாக மாறியுள்ளது . தமிழக ஓட்டுனர்களுக்கு தபால் வாக்கினை 2021 சட்டமன்றத் தேர்தலில் அறிமுகப்படுத்தாவிட்டால் தேர்தல் பணிக்காக EVM மிஷின் எடுத்து செல்லும் வாகனங்களை சிறைபிடிக்க திட்டமிட்டுள்ளோம்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆன்லைன் முறையில் வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்தி ஒப்புதலுக்காக ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ள தேர்தல் ஆணையர் நாடு முழுவதும் சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் 2 கோடி மேலான வாக்குகள் ஒவ்வொரு தேர்தலிலும் புறக்கணிக்கப் படுவதை தேர்தல் ஆணையம் அக்கறை கொண்டு உண்மையில் 100 சதவீத வாக்கை உறுதி செய்ய வேண்டும் .
ஆட்டோ கேஸ் , பெட்ரோல் , டீசல் விலை உயர்வால் வாடகை வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு 3.50 வரை மதிப்பு கூட்டுதல் வரியை உயர்த்தியது மேலும் மத்திய அரசு 1 ரூபாய் 2018 இறுதியில் சாலை மேம்பாட்டிற்காக உயர்த்தியது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 2020 முதல் 2021 ஊரடங்கு உத்தரவையும் பொருட்படுத்தாமல் 10 ரூபாய் வரை டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது . வாடகை வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கு மத்திய மாநில அரசுகள் எவ்வித சலுகையும் வழங்கவில்லை. ( மீனவர்களுக்கான டீசல் மானியம் , அரசு பேருந்துகளை இயக்க மத்திய அரசு டீசல் மீதான மானியம் வழங்கப்படுகிறது ) அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு எவ்வித சலுகையும் இல்லாத சூழ்நிலையில் இடைத்தரகர்கள் , கார்ப்பரேட் நிறுவனங்கள் வாடகை கட்டணத்தை நிர்ணையிப்பதால் வாகன உரிமையாளர்கள் நஷ்டத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர் . மத்திய மாநில அரசுகள் இடைத்தரக நிறுவனங்களை முறைப்படுத்த தவறுவதும் மாநில அரசு வாடகைக் கட்டணக்தை நிர்ணயம் செய்யாததும் மிகுந்த மன உளைச்சலில் வாடகை வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் உள்ளனர் . மத்திய அரசு பேட்டரி கார் மோகத்தால் நாடு முழுவதும் சிறு குறு வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை அழித்துவிட்டு வாகன உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவும் மின்சாரம் தயாரிக்க நிலக்கரி ஊழலுக்கு துணை போகவே தொடர் பெட்ரோல் உசல் வி உயர் வாடகை வாகன உரிமையாளர்கள் தலையில் திணிக்கும் செயல் கடந்த இரண்டு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டாலும் சுமார் 14.50 ₹ வரை டீசல் விலை உயர்ந்துள்ளது . தமிழக முதல்வர் திரு . எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக மாநில அரசுக்கான மதிப்பு கூட்டுதல் வரியை ரத்து செய்து தமிழக வாடகை வாகன உரிமையாளர்களை பாதுகாத்திட சுதந்திர வாடகை வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Comments
Post a Comment