தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரத்ததானம் முகாம்
சென்னை,மே.27,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வடசென்னை மாவட்டம் மற்றும் எக்மோர் குழந்தைகள் நல மருத்துவமனை இணைந்து எக்மோர் குழந்தைகள் நல மருத்துவமனை, இரத்த வங்கி வளாகத்தில் கொரோனா பேரிடர் கால 03வது இரத்ததானம் முகாம் மாவட்ட துணை தலைவர் காஜா மொய்தீன் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் 36 கொடையாளிகள் தங்கள் இரத்ததை தானமாக வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவரணி செயலாளர் சித்திக், மாவட்ட துணை செயலாளர்கள் அன்சாரி, முபாரக் மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் சமீர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
Comments
Post a Comment