தொண்டு நிறுவனம் சார்பில் மதிய உணவு அமைச்சர் தொடங்கிவைத்தார்

தொண்டு நிறுவனம் சார்பில்  மதிய உணவு
அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்
சென்னை,மே.29,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில்   கூலித் தொழிலாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 
இதனிடையே சென்னையில் தனியார் தொண்டு நிறுவனம்  சார்பில் இலவசமாக மதிய உணவுகள் வழங்கப்பட்டன. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் பயன் பெற்று வருகின்றனர்.  சென்னை பிராட்வே பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சில் மத்திய உணவு திட்டத்தை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு எம்.எல்.ஏ., தொடங்கிவைத்தார். இதில்  200 க்கும் மேற்பட்டோர்க்கு மதிய உணவு வழங்கப்பட்டது. 
நிகழ்ச்சிக்கான ஏற்பட்டை தொண்டு நிறுவனம் நரேந்திரகுமார் செய்திருந்தார்.
 

Comments