கொருக்குப்பேட்டை மஸ்ஜிதே அசிம் மதரசா பள்ளிவாசலின் சார்பாக ஏழைகளுக்கு மதிய உணவு
சென்னை,ஜூன்.01,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள், தொழிலாளிகள், ஏழை எளிய மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு நாள்தோறும் பல்வேறு தொண்டு நிறுவணம்கள் சார்பில் உணவு மன்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே நேற்று சென்னையில் கொருக்குப்பேட்டை மஸ்ஜிதே அசிம் மதரசா பள்ளிவாசலின் சார்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளில் உறவினர்கள் ஆயிரம் பேருக்கு மதியம் உணவு வழங்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி அனைவரும் வரிசையில் வந்து உணவை வாங்கி சென்றனர். இதில் பள்ளிவாசல் நிர்வாகி ஜமால் பாஷா, முகமது சபி, ஆன்சர் லத்தீப் ஆகியோர் மத்திய உணவை வழங்கினர். இவர்களது சேவையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
Comments
Post a Comment