பா.ஜ.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க அரசை கண்டித்து
கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்
ஆதிதிராவிடர் இளைஞர்கள் மற்றும் வழக்கறிஞர்களுககான சிறப்பு நலத்திட்ட உதவிகளை ரத்து செய்த பா.ஜ.க அரசை கண்டித்து கண்களை கட்டிக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம்

சூளை:மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆதிதிராவிடர் இஞைர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தொழில் தொடங்க தலா ரூபாய் 50 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை திட்டம் உள்பட 8 நல உதவித் திட்டங்களுக்கான சிறப்பு நிதியை மத்தியில் ஆளும் பா.ஜக. அரசு நிறுத்தியதை கண்டித்து மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் 
எம். பி. ரஞ்சன் குமார் அவர்கள் தலைமையில் கருப்பு துணியால் கண்களை கட்டிக்கொண்டு சூளை தபால் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ண மூர்த்தி,மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் அணுகுண்டு ஆறுமுகம் ஆகியோர் கலந்துக்கொண்டு தலித்துக்களுக்கெதிராக விரோத போக்கை கடைபிடித்து வரும்
மத்திய அரசை கண்டித்து
கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு கண்டன உரையாற்றினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாநிலச் செயலாளர்கள் செ.நிலவன், எஸ்.ரஞ்சித்குமார், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் வழக்கறிஞர் ஆர். ராஜேஷ், எழும்பூர் பகுதி சர்க்கிள் தலைவர்கள் வழக்கறிஞர் சி.பி.நரேஷ்குமார் மற்றும் எம்.டி சூர்யா ஆகியோர் முன்னிலையில்
நடைபெற்றது.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழும்பூர் பகுதி கலைப் பிரிவு தலைவர் பா.சந்திரசேகர், சூளை ராஜேந்திரன் , வட்டத் தலைவர்கள் செல்வம் மற்றும் குபேந்திரன்,மாவட்ட செய்திதொடர்பாளர் வி.சஞ்சய், பெரம்பூர் பகுதி மகளிரணி அணி தலைவர் பா. ராஜலட்சுமி, மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சுமதி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் திறளாக கலந்துகொண்டனர்.

Comments