இந்திய சமூக நல அமைப்பு சார்பில் மனித கடத்தல் எதிர்ப்பு சங்கம் மற்றும் எச். எஸ். எஃப் பைலட் திட்டம் துவக்க விழா
எழும்பூர்:
இந்திய சமூக நல அமைப்பு சார்பில் மனித கடத்தல் எதிர்ப்பு சங்கம் மற்றும் எச். எஸ். எஃப் பைலட் திட்டம் துவக்க விழா இக்சா மையம், ஜீவன் ஜோதி அரங்கத்தில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்வில் இந்திய சமூக நல அமைப்பின் செயலாளர் ஜே.ஹரிஹரன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களான மனித கடத்தல் விஷயங்கள் சர்வதேச நிபுணரும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியுமான முனைவர் பி.எம். நாயர் அவர்கள் மனிதக் கடத்தல் எதிர்ப்பு சங்கத்தின் தத்துவத்தை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இந்தியாவின் எச். எஸ்.எஸ்.குடியுரிமை பிரதிநிதி முனைவர் வோல்கர் லெனார்ட் பிளான் அவர்கள் மனித கடத்தல் விஷயங்களில் எச். எஸ். எஃப் பங்களிப்பு குறித்து பேசினார்.
இறுதியில் இந்தியாவின் எச். எஸ்.எஸ். குடியுரிமை பிரதிநிதி உஷா சுப்ரமணியன் அவர்கள் நன்றியுரை கூறினார்.
Comments
Post a Comment