பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் முப்பெரும் விழா

சென்னை:பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு கல்லூரி வளாகத்தில்
 நடைப்பெற்றது. முதல் நிகழ்வாக
எக்ஸ்னோரா அமைப்புடன்  இணைந்து  கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்தல், அதனை தொடர்ந்து பூச்செடிகள் நடுதல் நிகழ்வும்.
இரண்டாவது நிகழ்வாக ஃபிட் இந்தியா ஃபிரீடம் ரைடர் சைக்கிள் பேரணி மற்றும் காந்திஜி மற்றும் பாரதியார் உருவப்படத்திற்கு மலர் தூவியும்    56- வட்ட மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான பரிமளம் அவர்கள் கொடியசைத்து துவக்கி  வைத்தார்.

மேலும் சைக்கிள் பேரணி கல்லூரி வளாகத்திருந்து தங்கச்சாலை பேருந்து நிலையம் வரை (இருவழி) சென்று  தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது. இறுதி நிகழ்வாக பாரதி மகளிர் கல்லூரியின்  நாட்டு நலப்பணி திட்ட  2021-2022 ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வும்  நடைப்பெற்றது. மேலும் இந்த நிகழ்வில்     நாட்டு நலப்பணி திட்ட  அலுவலர் முனைவர் எஸ்.லாவண்யா அவர்கள் ஆண்டறிக்கையை வாசித்தார்.
இறுதியில் மூத்த மற்றும் சிறந்த நாட்டு நலத்திட்ட மாணவிகளின் சேவையை போற்றும் வகையில் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Comments