இந்திய தேசிய லீக் கட்சி கவன ஈர்ப்பு பேரணி


சென்னை, சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள 38 முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் உட்பட ராஜீவ் காந்தி வழக்கில் உள்ள ஆறு பேரையும் உடனே விடுதலை செய்ய கோரி இந்திய தேசிய லீக் கட்சி சென்னை மண்டலம் சார்பாக மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி . 
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நீண்டகாலம் சிறையில் வாடும் 700 ஆயுள் தண்டனை கைதிகளை மனிதநேய அடிப்படையில் முன்விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்தது அந்த அடிப்படையில் 38 முஸ்லிம் ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் ராஜீவ் காந்தி வழக்கில் உள்ள ஆறு பேர் உட்பட 10 ஆண்டு சிறைவாசம் முடித்தவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் ஆயுள் தண்டனை கைதிகள் முன் விடுதலை விஷயத்தில் விசாரணை நடத்தி விடுதலை செய்ய நீதிபதி தலைமையில் ஒரு குழுவை தமிழக முதல்வர் நியமித்தார். இந்த குழு நியமித்து சுமார் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் முடிவு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வட மாநிலங்களில் நக்சலைட் வழக்கில் சம்மந்தப்பட்ட போராளிகள் மற்றும் பூலான் தேவி உட்பட நிறைய பேரை அந்தந்த மாநில அரசுகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கொண்டு பல வழக்குகளை இது போல மேற்கோள் காட்டலாம். இருந்தாலும் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை சிறையில் முஸ்லீம்கள் மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உள்ள நளினி உட்பட ஆறு பேரை விடுதலை மறுக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
கடந்த காலத்தில் அண்ணா நூற்றாண்டு விழா போன்ற முக்கிய அரசு விழாக்களின் போதுகூட இவர்கள் விடுவிக்கப்படவில்லை . மேலே கண்ட சிறைவாசிகளில் பலர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஆனாலும் , அவர்களுக்குக் கருணை காட்டப்படவில்லை .

மேற்கண்டவர்களை விடுதலை செய்வதற்கு விதிமுறைகள் ஏதேனும் தடையாக இருக்குமானால் , தமிழக அரசு சிறப்பு ஆணையின் மூலம் அவற்றை நீக்கி இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய முன்வரும்படி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை  இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக   வலியுத்துகிறோம். இந்திய தேசிய லீக் கட்சி சென்னை மண்டலம் சார்பாக நடைபெற்ற பேரணியில் மாநில தலைவர் தடா ஜெ அப்துல் ரஹீம் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் யூனுஸ் கான், மாநில துணை தலைவர் சுலைமான் சேட், மாநில செயலாளர் கம்பம் சாதிக் . மாநில துணை பொதுச் செயலாளர் கலீல் பாஷா, மாநில நிர்வாகிகள் இல்லீயாஸ் பாஷா சலீம் பாய், மண்டல தலைவர் நூர் முகம்மது, மண்டல செயலாளர் அப்துல் காதர் , வட சென்னை மாவட்ட தலைவர் அப்துல் சமது, வட சென்னை மாவட்ட செயலாளர்கள் அப்துல் ரஹீம் , நெல்லை கலீல் , ரஹீம் சேட் , தென் சென்னை மாவட்ட தலைவர் ரஃபி, தென் சென்னை மாவட்ட செயலாளர்கள் அல்தாப் உசேன் அன்வர் , செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ரகமத்துல்லாஹ், மாவட்ட செயலாளர்கள் வசீம் கான் , தீன் முகமது , காஞ்சி மாவட்ட தலைவர் அன்சாரி , மாவட்ட செயலாளர் சுகையில்  மாவட்ட தலைவர் ரஃபி அலி, ராணிப்பேட்டை வேலூர் மாவட்ட தலைவர் சவுகத், திருவல்லிக்கேணி பகுதி தலைவர் யாசீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments