இந்திய மாலுமிகள் நல அறக்கட்டளையின் சார்பில்
இலவச கண் சிகிச்சை முகாம்!
சென்னை, :இந்திய மாலுமிகள் நல அறக்கட்டளையின் நிர்வாக அலுவலகம் திறப்பு விழா மற்றும் துறைமுக கழக கமிட்டி, எம்.என்.கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் காசிமேடு பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்திய மாலுமிகள் நல அறக்கட்டளை தலைவர் ஆ.பாபு மைலன் அவர்கள் தலைமை வகித்தார்.
இந்திய மாலுமிகள் நல அறக்கட்டளை துணைத் தலைவர் டாக்டர். எஸ்.ஜெஸிலின், சமூக நீதிப்பேரவை மாநிலத் தலைவர் சேவரத்னா பால்ராஜ் குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய மாலுமிகள் நல அறக்கட்டளையின் நிர்வாக அலுவலகத்தை
சென்னை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இளைய அருணா அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாமை அருட்தந்தை அந்தோணி அவர்கள் தொடங்கி வைத்தார்.
இவ்விழாவின் கூடுதல் சிறப்பாக உலக தந்தையர் தினத்தையொட்டி ஆ.பாபு மைலன் அவர்கள் அவர் தம்முடைய பெற்றோர்களான ராஜூ ஆரணி - அஞ்சலை அம்மாள் ஆகியோரது மார்மளவு திருவுருவச் சிலையை திறந்து வைத்து பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பாபு மைலன் அவர்கள் எழுதிய "lovely Boys - Cute Girls" நூல் விழா விருந்தினர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
மேலும் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற கண் சிகிச்சை முகாமில், அனைவருக்கும் இலவசப் கண்பாா்வை பரிசோதனை, ரத்த அழுத்த சோதனை, நீரிழிவு பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டு மூக்கு கண்ணாடி மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், மீனவர் சங்க பிரதிநிதி பரணி,சமூக ஆர்வலர் ரேகா உள்ளிட்டோர் பலர் கலந்துக்கொண்டனர்.
Comments
Post a Comment