சென்னை, தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளில் 19 ஆண்டு காலமாக பணிபுரிந்து வரும் ஊழியர்கள் புதிய ஆட்சியாளர்களிடம் கேட்டது தொகுப்பூதியத்திலிருந்து காலமுறை ஊதியமே . ஆனால் வழங்கியதோ தொகுப்பூதியத்தில் சிறு உயர்வு மட்டுமே . இந்த ஊதிய உயர்வு எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல .
டாஸ்மாக் கடைகளோடு இணைந்துள்ள பார்களுக்கான உரிமம் வழங்குவதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளன . ஒவ்வொரு மாவட்டத்திலும் பெயரளவிற்கு உரிமங்கள் வழங்கப்பட்டு பெரும்பான்மையான பார்கள் உரிமம் இல்லாமல் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது . இதனால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதை அமைச்சரும் கவலைப்படவில்லை . அதிகாரிகளும் கண்டும் காணாதது போல் உள்ளனர் . இதுதவிர கடை ஊழியர்களை மிரட்டி பெட்டி பெட்டியாக மதுபாட்டிலைகளை வாங்கி பார்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்யவும் அனுமதிக்கப் பட்டுள்ளனர் . இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் ஒத்துபோவது மட்டுமல்ல , ஊழியர்களை உடன்பட நிர்ப்பந்தம் செய்கின்றனர் . உடன்படாத ஊழியர்களை குறிவைத்து பணியிடமாறுதல் , பழிவாங்கல் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்.
டாஸ்மாக் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் மீது முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு தொழிலமைதியை ஏற்படுத்திட வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் டாஸ்மாக் மண்டல அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
Comments
Post a Comment