இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா
சென்னை,
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, ஏஐசி -அண்ணா யுனிவர்சிட்டி இன்குபேஷன் பவுண்டேஷனில் ஒரு இன்குபேட் ஆன ஸ்டார்ட்டப். ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனம் மட்டுமே இதுவரை 18 பலூன் செயற்கைகோள்கள், 2 சப்ஆர்பிட்டல் செயற்கைக்கோள்கள் மற்றும் 2 ஆர்பிட்டல் செயற்கைகோள்களை விண்ணில் ஏவியுள்ளது. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவிற்கு 3 சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களான அமெரிக்காவின் நாசா, ஐரோப்பாவின் இஸ்ஏ மற்றும் ஜிசிடிசி எனப்படும் ரஷய் விண்வெளி பயிற்சி மையம், நிலைதூதர் அந்தஸ்தை கொடுத்து கவுரவித்துள்ளது.
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா மற்றும் அண்ணா இன்குபேட்டர் சேர்ந்து விண்வெளி அமைப்பு ஆய்வகத்தை, அண்ணா பல்கலைக்கழக இன்குபேட்டரில் 23 ஜீன் 2022 அன்று, தொடங்கியது. இதற்கு சிறப்பு விருந்தினராக, இந்தியாவின் நிலா மனிதர் என்று அழைக்கப்படும்,
முன்னாள் இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் கலந்து கொண்டார் .இந்த புதிய உடனுழைப்புடன், அண்ணா இன்குபேட்டர், தன் ஆய்வகத்தை பயன்படுத்திக்கொள்ளவும் மற்றும் அண்ணா பல்கலைகழகத்தின்
நிபுணத்துவத்தை பயன்படுத்தவும் அனுமதிக்கிறது. இந்த புதிய உடனுழைப்பின் நோக்கம், மாணவர்களுக்கு வர்க் ஷாப்(workshop) ,ஹாக்கதொன் ( Hackathon) , செமினார் /வெயினார் ( Seminar/ Webinar ) மூலம் பயிற்சி அளிப்பது, இந்த பயிற்சி அண்ணா பல்கைைழகம் மற்றும் அதனுடன் இணைந்த கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கும் கொடுக்கப்படும்.
இதனுடன் மாணவர்களுக்கும் இளம் விஞ்ஞானிகளுக்கும் ஆன்சைட் இன்டர்ன்ஷிப் ( Internship ) கொடுக்கப்படும் இது செயற்கைகோள் மற்றும் விண்வெளி அமைப்பு சார்ந்ததாக இருக்கும்.
ஸ்பேஸ் இட்ஸ் இந்தியா, இந்த இன்குபேட்டரில் இருந்து செயல்படுத்தப்போகும் முதல் திட்டம் "அஸாதிசாட்". அஸாதிசாட் என்பது, ஒரு விண்வெளி கனவு திட்டம் இந்த திட்டத்தில் அரசு பள்ளிகளை சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறிய அளவான செய்முறைகளை செய்ய பயிற்சி அளித்து,அதை அஸாதிசாட் ஏற்றுப்பாதை செயற்கைகோள் மூலம் விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறது.
இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, இந்த திட்டத்தை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, நமது நாட்டின் 75வது சுதந்திர தினத்திற்காக அர்ப்பணிப்பதேயாகும்.
Comments
Post a Comment