சென்னை, 13 வது சென்னை ஓபன் சர்வதேச சதுரங்க போட்டி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை நேரு மைதானத்தில் உள்ள தமிழ்நாடு செஸ் சங்கத்தின் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது சங்கத்தின் செயலாளர் வாசுதேவன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வருகிற 19 தேதி எழும்பூரிலுள்ள அம்பாஸிஸ்டர் பல்லவா விடுதியில் 10 நாட்கள் போட்டியாக 13 வது சென்னை ஓபன் சர்வதேச சதுரங்க போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டிக்கு 15 லட்சம் ரூபாய் பரிசு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் 24 நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
11 நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.இதில்
மொத்தம் 268 வீரர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர், அதில் 28 வெளி நாட்டு வீரர்கள், 50க்கும் மேற்பட்ட வெளி மாநிலத்தவர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment