சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் திருமான மண்டபத்தில் தமிழ் நாடு அனைத்து விநியோக தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக விநியோக தொழிலாளர்களின் எழுச்சி விழா நடைபெற்றது.
சங்கத்தின் மாநில தலைவர் சிவ ராமகிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரைசாந்திர சேகர், தி மு க பிரமுகர் ஆர் சி எம் விஷ்ணுபிரபு, ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவ ராமகிருஷ்ணா கூறியதாவது:
சுகி சொமட்டோ போன்ற உணவு பொருட்கள் விநியோகம் செய்யும் தொழிலாளர்கள் பால், சமையல் எரிவாயு பேப்பர் விநியோகம் செய்யும் தொழிலாளர்கள் இந்த சங்கத்தில் செயல்பட்டு வருகின்றனர் அவர்கள் அனைவரையும் தொழிலாளர் நல வாரியத்தில் இணைக்கவேண்டும்.
அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்
எங்கள் ஆதரவு திமுகவிற்கு தான், ஒருபோதும் மத அரசியலையும் முன்னிருத்தியும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் துணை போகும் பாஜகவிர்க்கும் ஒரு போதும் ஆதரவு அளிக்க மாட்டோம் என தெரிவித்தார்
Comments
Post a Comment