பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் உள்ளிருப்பு உண்ணாவிரதம்
சென்னை,
சென்னை பச்சையப்பன் அறக்கட்டளைக்கு நியமிக்கப்பட்ட சொத்தாட்சியர் மற்றும் செயலர் இருவரின் அராஜகத்தைக் கண்டித்து கல்லூரிகளை நிர்வகிக்க தமிழக அரசு தனிஅலுவலரை நியமிக்கக்கோரி மாபெரும் உள்ளிருப்பு உண்ணாவிரதம் . கோரிக்கைகள், சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்ட பச்சையப்பன் அறக்கட்டளையின் தேர்தலை உடனடியாக நடத்திடுக , தேர்தலை நடத்தாமல் அறக்கட்டளையின் பணத்தை நீதிமன்றத்தில் அனுமதிபெறாமல் விரயம் செய்யாதே . ஆசிரியர் மற்றும் அலுவலர் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஆசிரியர்களைக் கல்வித்தகுதியை கொச்சைப்படுத்தி பேசுவதை நிறுத்திக்கொள்க . தமிழ்நாடு தனியார்க்கல்லூரி ஒழுங்காற்று சட்டத்திற்கு புறம்பாக கல்லூரிக்குழுவை அமைக்காதே . ஆசிரியர்களையும் அலுவலர்களையும் குறிப்பாக பெண் ஆசிரியர்களை அறைக்கு அழைத்து கொச்சைப்படுத்தி கேவலமாக பேசும் இடைக்கால செயலரே உம்போக்கை மாற்றிக்கொள்க .
நிர்வாகத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் ஆசிரியர் மற்றும் அலுவலர் மீது காவல் நிலையத்தில் பொய்புகார் மற்றும் பொய்வழக்குகள் கொடுக்காதே .
சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி அமர்வின் ஆணையின்படியும் , கல்லூரிக்கல்வி , மற்றும் சென்னை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் ஆணையின்படியும் சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை பேரா . எல்.சி. திருமலை அவர்களை உடனடியான பணியில் அமர்த்திடுக.
. பணிஓய்வு பெற , ஒரு சில நாட்களே உள்ள நிலையில் மூத்த பேராசிரியர்களை சட்டத்திற்கு புறம்பாக பணியிடைநீக்கம் மற்றும் பணியிடமாற்றம் செய்து ஆணையிட்டதை திரும்பப்பெறுக .
பாதிக்கப்பட்ட பேராசிரியர்கள் நீதிமன்றமத்தை நாடி , தடையாணை பெற்ற பிறகும் கூட ,அதனை அமல்படுத்தாமல் , நீதிமன்றத்ததை அவமதிக்கும் இடைக்கால நிர்வாகமே அறக்கட்டளையை விட்டு வெளியேறுக .
சென்னை மண்டல இணை இயக்குநரின் ஆணைப்படி பேராசிரியர்களின் பணிமேம்பாட்டுக் கோப்புக்களை உடனடியாக அனுப்பிடுக .
பத்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த கௌரவிரிவுரையாளர்களை , அவர்கள் பல்கலைக்கழக தகுதிச்சான்றிதழ் பெற்றிருந்தும் , மீண்டும் பணியமர்த்துவதை மறுக்காதே .
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி. உள்ளிருப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
Comments
Post a Comment