பள்ளி மாணவி மரணம்:
நீதி விசாரணை வேண்டும்
அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை.19, அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் டி.கே. சத்தியசீலன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கள்ளக்குறிச்சி சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் இழப்பீடு வழங்க வேண்டும் .
தமிழ்நாட்டுக் காவல் துறையின் மெத்தனம் காரணம் தான் பொதுமக்கள் பள்ளியின் பொருட்களை அடித்து நொறுக்கினார் .
இதேபோல்தான் பாதுகாப்பு கேட்டு ADMK அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தும் பாதுகாப்பு இல்லாமல் இரு குழுக்களாக அடித்துக் கொண்டனர் .
தமிழக அரசு வழங்கும் சேமநல நிதியை 20 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் .
தமிழக அரசு தற்போது வழங்கிவரும் சேமநலநிதி 10 லட்சத்தில் பாதி ரூபாய் ஐந்து லட்சத்தை உயிருடன் இருக்கும்போதே வழங்க வேண்டும் .
உச்சநீதிமன்ற கிளை உடனடியாக சென்னைக்கு கொண்டு வர வேண்டும் .
தமிழகத்தின் தேங்கி உள்ள வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிக்க வேண்டும் .. நீதிபதிகள் நியமனங்களில் அரசியல் தலையீடு இல்லாமல் தகுதியுள்ள வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் .இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment