சென்னை தமிழக காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவராக ரஞ்சன் குமார் பதவியேற்பு

சென்னை தமிழக காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவராக ரஞ்சன் குமார் பதவியேற்பு
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவு தலைவராக ரஞ்சன் குமாரை கட்சி தலைமை நியமித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவு தலைவராக செல்வப்பெருந்தகை பதவி வகித்து வந்தார். கடந்த 7 ஆண்டுகளாக இதே பொறுப்பில் இருந்து வந்த நிலையில், தற்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவுக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், எஸ்சி பிரிவுக்கு புதிய தலைவரை நியமித்து டெல்லி காங்கிரஸ் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலோடு, தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவு தலைவராக எம்.பி.ரஞ்சன் குமார் நியமிக்கப்பட்டார். 
இந்நிலையில் சென்னை சதியமூர்திபவனில் தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவு தலைவராக ரஞ்சன் குமார் பதவி பதவியேற்பு  விழா நடைபெற்றது.
அகில இந்திய காங்கிரஸ்  எஸ் சி பிரிவு தலைவர் ராஜேஷ் லிலோத்தியா தலைமையில் நடைபெற்ற விழாவில் பெருமளவிலான தொண்டர்கள் கலந்து கொண்டனர் 


Comments