சென்னை, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு அழைத்ததை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஈவிகேஸ் இளங்கோவன், கே.வி. தங்கபாலு, செல்வப் பெருந்தகை,தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் ஆர்.டி.ஐ பிரிவு மாநில தலைவர் வழக்கறிஞர் சி.கனகராஜ்தமிழக காங்கிரஸ் சேவாதள மாநில தலைவர் குங்க்பூ விஜயன் உள்ளிட்ட தலைவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஜெ.டில்லிபாபு,ராஜசேகரன்,நாஞ்சில் பிரசாத் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு காவல்துறையில் கைதாகினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் ஆர்.டி.ஐ பிரிவு மாநில தலைவர் வழக்கறிஞர் சி.கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்.., மத்திய அரசு அமலாக்க பிரிவை அரசியல் காரணங்களுக்காக தவறாக பயன்படுத்துகிறது தேசத்தின் பொதுத்துறையான அமலாக்கப் பிரிவு தற்போது பாஜகவின் ஒரு அணியாக செயல்பட்டு வருகிறது என்ற குற்றம் சாட்டினார். வருகிற 2024 ஆம் ஆண்டில் பிரதமர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி மலர்ந்தே தீரும் என்று கூறினார்.
Comments
Post a Comment