மீனவருக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டும் அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நாஞ்சில் P.ரவி வலியுறுத்தல்

20/11/2022

மீனவருக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டும்
அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நாஞ்சில் P.ரவி  வலியுறுத்தல்

சென்னை,நவ.21, அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நாஞ்சில் P.ரவி  கூறியதாவது:-
உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் மீனவ சொந்தங்களுக்கும், மீன்பிடி தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மீன்பிடித் தொழிலை நம்பி இருக்கும் உறவுகளுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும், நடுநிலையாளர்களுக்கும், பத்திரிக்கை துறை நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் அனைத்து மீனவர்கள் சங்கத்தின் சார்பில்
உளமாற நெஞ்சம் நிறைந்த இனிய 25வது உலக மீனவர்கள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் .
உலக மீனவர் தினத்தில் மீனவ மக்களாகிய நாங்கள் இந்த அரசு (திமுக) மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளோம் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
அதே வேளையில் இந்த அரசு (தி.மு.க) பொறுப்பேற்று 200 நாட்களை
கடந்துவிட்ட நிலையிலும் நாங்கள் மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின்
அவர்களிடம் திமுக ஆட்சிக்கு வந்தால் தி.மு.க வின்15 வது சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் மீனவர்களுக்கு அறிவித்த
கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்.
மீனவ சமுதாயத்தைக் கடல்சார் பழங்குடியின மக்கள் என்று பழங்குடியினர் பட்டியல் யில் சேர்ப்பதற்கும், பழங்குடியினருக்குள்ள அளைத்துச் சலுகைகளையும் மீனவர்கள் பெறுவதற்கும் திமுக கழகம் முயற்சி செய்யும்
சிங்காரவேலர் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் தமிழக கடற்கரையோர பகுதிகளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம். தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் மேலும் ஏற்கனவே குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கு முன்னால் வழங்கப்பட்ட வீடுகள் சிதலமடைந்து ள்ளதால் அங்கு வசிக்கும் மீனவர்கள் நலம் கருதி புதிய குடியிருப்பு மீனவர் வீட்டு வசதி வாரியத்தால் கட்டி தரப்படும்.
 மீன்பிடி தடைகால நிவாரணத் தொகை தற்போது வழங்கப்படும் ஐந்தாயிரம் ரூபாய் என்பது 8000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

 விசைப்படகுக்கு வழங்கப்படும் மானிய விலை டீசல் 1800 லிட்டர் என்பது 2000 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும், அதேபோல் கட்டுமரம், நாட்டு படகு ,பைபர் படகு இவற்றிற்கு தற்போது வழங்கப்படும் எரிபொருள் அளவு 300 லிட்டர் என்பது 400 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.

 தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மீன்பிடித் தொழில் வளர்ச்சிக்கு தேவையான மீன்பிடி துறைமுகங்களும் குளிர் பதன சேமிப்பு கிடங்குகளும் தேவையான பகுதிகளில் உருவாக்கப்படும்.

 தமிழகத்தில் உள்ள அனைத்து மீன்பிடி துறைமுகங்களும் மறுசீரமைப்பு செய்யப்படும் காசிமேடு, அக்கரைப்பேட்டை, ராமேஸ்வரம் மற்றும் தொண்டியில் உள்ள மீன்பிடி துறைமுகங்கள் நவீன வசதிகளுடன் விரிவுபடுத்தப்படும்.

குளச்சலில் மீன்பிடி படகு தொழிற்சாலை தொடங்க உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்
என உங்கள் தேர்தல் அறிக்கையில் 112 முதல் 136 வரை மீனவர்களுக்கான தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்டது இதில் பல்வேறு விஷயங்கள் இன்று வரை தீர்வு காணப்படாமல் உள்ளது.

 தமிழகத்துடைய முதலமைச்சராக மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வந்தவுடன் மீனவருடைய எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்று நம்பி தான் தமிழகத்தில் இருக்கக்கூடிய 14 கடலோர மாவட்ட மீனவர்கள் சுமார் ஒரு கோடி பேர் வாக்களித்து தாங்கள் தமிழகத்தினுடைய முதலமைச்சராக பதவியேற்றீர்கள்.

 பதவியேற்ற உடன் முத்துவேல் கருணாநிதியின் மகனாகிய மு.க. ஸ்டாலின் என்னும் நான் சொன்னதையும் செய்வேன் சொல்லாததையும் செய்வேன் என்று வாக்குறுதி அளித்தீர்கள் அதேபோன்று பல விஷயங்களை தாங்கள் செய்திருப்பதை மனப்பூர்வமாக பாராட்டுகின்றோம்.
அதேவேளை எங்களுடைய மீனவ சமுதாயத்திற்கு தாங்கள் பெரிதும்
உதவி செய்வீர்கள் என்று நம்பிக்கையோடு இருந்தோம் .

 ஆனால் தமிழகத்தில் உங்கள் ஆட்சியில் உங்கள் மந்திரி சபையில் பிறப்பால் மீனவனாகிய மீனவர்க்கு நீங்கள் மீன்வளத்துறை அமைச்சர் பதவி வழங்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
அதே போன்று தமிழகத்தில் மீனவ MLAக்கு மாவட்ட செயலாளர் பதவி உங்களது கட்சியில் வழங்காமல் இருப்பதும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது

 மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நான் சர்வாதிகாரி போன்று மாறி தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னீர்கள்

 ஆனால் தாங்கள் எந்த சமூகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை தாங்கள் மீனவ சமுதாயத்தின் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்திருப்பது போன்று எங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

 எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மறுபரிசீலனை செய்து பிறப்பால் மீனவருக்கு மீன்வளத்துறை மந்திரி பதவியும் மாவட்ட செயலாளர் பதவியும் வழங்க வேண்டும்.

 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மீனவ சமுதாயத்தில் பிறந்த D.ஜெயக்குமார் அவர்களுக்கு மீன்வளம், காட்டுவளம் பால்வளம், கல்விதுறை, சட்டத்துறை, மின்துறை, சீர்உடைபணியாளர் நலத்துறை மற்றும் GST மற்றும் 15 வது சட்டப்பேரவையின் தலைவர் என ஆறு முதல் ஏழு பதவிகள் வழங்கப்பட்டிருந்தது சபாநாயகர் பதவி கூட வழங்கப்பட்டிருந்தது அப்படிப்பட்ட பிறப்பால் மீனவராக இருந்த D.ஜெயக்குமாரை அண்ணா திமுக அலங்கரித்தது.

 ஆனால் திமுக வின் இந்த ஆட்சில் மீனவருக்கு மீன்வளத்துறை மந்திரி பதவி வழங்க மறுப்பதும் மாவட்ட செயலாளர் பதவி வழங்க மறுப்பதும்
தமிழக வரலாற்றிலே மீனவர் அல்லாதவருக்கு மீன்வளத்துறை மந்திரி பதவியை கொடுத்திருப்பதும் மீனவர்களை அவமானப்படுத்துவதற்க்கு சமம் எப்படி இலங்கை கடற்படை தமிழக எல்லையில் மீனவர்களை சுட்டு கொலை செய்யப்படுகின்றதோ அதே போன்ற கொடூரம் தான் மீளவர் ஜாதியின் அடையாளத்தை அழிப்பதற்க்கு சமம் மீனவர் அல்லாதவர் மீன்வளத்துறைக்கு அமைச்சராக இருப்பது. அப்படி தான் தற்போது மீனவர்கள் அரசியலில் தனிமைப்படுத்தப்படுகின்ற அவல சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 உங்களை நம்பி வாக்களித்த மீனவ சமுதாயத்திற்கு தாங்கள் துரோகம் செய்யாமல் மீனவ சமுதாயத்திற்கு மாவட்ட செயலாளர் பதவியும் மந்திரி பதவியும் வழங்க வேண்டும்.

 மேலவை உறுப்பினராக மீனவருக்கு வழங்குவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு மீனவருக்கு மேலவை உறுப்பினர் வழங்காமல் ஏமாற்றிவிட்டீர்கள் என்று ஏற்கனவே மீனவர்கள் குமுறிக்கொண்டு இருக்கின்றார்கள்.

 தற்போது மீனவ சமுதாயத்தில் பிறந்தவர்களுக்கு மீன்வளத்துறை மந்திரி பதவி வழங்காத காரணத்தினால்

 தமிழகத்தினுடைய 14 கடலோர மாவட்டத்திலும் BJP கட்சியின் கைகள் ஓங்கி வளர்ந்து கொண்டிருக்கிறது. அதேபோன்று அண்ணன் சீமான் அவர்களுடைய கட்சிகளும் வளர்ந்து கொண்டு இருக்கின்றது. அதேபோன்று அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுடைய கட்சிகளும் வளர்ந்து கொண்டு இருக்கிறது.
பெரிதும் திமுகவின் ஓட்டு வங்கி சரிந்து கொண்டிருக்கிறது.

இதற்குக் காரணம் தமிழகத்தில் இருக்கக்கூடிய 14 கடலோர மாவட்டங்களிலும் மீனவ தலைவர்கள் மீனவ சமுதாயத்திற்கு திமுக பெருமளவு சாதகமாக இல்லை என்று கருதுவதால் எந்த கட்சி வளர்ந்தால் நமக்கு என்ன என்று பஞ்சாயத்தார்கள் முடிவு செய்து எந்த கட்சி நமது சமுதாயத்தை தூக்கிப் பிடிக்கிறதோ அந்த கட்சிக்கு வாக்களிப்போம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.

இதை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மீனவ சமுதாயத்தைச் சார்ந்தவருக்கே மீன்வளத்துறை மந்திரி பதவியும், மாவட்ட செயலாளர் பதவியும் வழங்கினால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும் என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் தாங்கள் தமிழகத்தில் 38 தொகுதிகளும் பாண்டிச்சேரி, காரைக்கால் உட்பட 40 தொகுதிகளிலும் தாங்களின் வெற்றி வாய்ப்பு சரிவை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது.

மற்ற சமூகத்தை போன்று மீனவர்களுக்கு என்று தனி கட்சி கிடையாது மீனவ சமூகம் திமுகவை நம்பி இருக்கிறது.

எனவே இதை சரி செய்ய உடனடியாக பிறப்பால் மீனவராகிய மீனவர் ஒருவருக்கு மீன்வளத்துறை மந்திரி பதவி வழங்கி தாங்கள் மீனவருடைய வாக்கு வாங்கியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும்,
எனவே பிறப்பால் மீனவ சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு மீன்வளத்துறை மந்திரி பதவி வழங்கி நாயும் தந்தையும் இல்லாமல் மீனவ இனத்துக்கு தலைமை இல்லாமல் மாற்று சமூகத்தை சார்ந்தவர் தலைமையில் இந்த மீனவர் தினம் கொண்டப்படுவது கொடுமை இதை மாற்றி இந்த உலக மீனவர் தினத்தை சிறப்பு உள்ளதாக பயன் உள்ளதாக பிறப்பால் மீனவர் தலைமையில் உலக மீனவர் தினம் கொண்டாடும் நாள் தான் உண்மையான உலக மீனவர்கள் தினமாக அமையும் எம் மீனவ மக்களின் தினம் என் மீனவர் தலைமையில் நடைபெற தாங்கள் நல்ல முடிவு எடுத்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
 என்று அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர்  டாக்டர் நாஞ்சில் P.ரவி  கூறினார். மாநில அமைப்புசெயலாளர் M.சுப்பிரமணி. மாநில பொதுச்செயலாளர Dr.மனோகர்ஜீ வடசென்னை மாவட்ட செயலாளர் S.முருகன், மாநில துணைத்தலைவர்கள் தணிகைமலை, K.ரமேஷ், மாநில தலைவி R.சீத்தா.
மாநில துணை செயலாளர் E.சேகர் 
ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments