பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

 சென்னை, தமிழகத்தில் அரசு கல்லூரி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரியில், 01-01-2006 க்குப் பிறகு, பணியில் பணிமேம்பாடு வழங்கிட தமிழக அரசு சேர்ந்த ஆசிரியர்களுக்கு. வழங்கிட தமிழக அரசு அரசாணை எண்: ஐ 5 இயக்குளர் அவர்களின் வெளியிட்டதன் அடிப்படையில், செயல்முறைகள் (R.C.No.28377/J1 2018, நாள்: 04/05/2021) நடைமுறையில் உள்ளது.

 இந்நிலையில், அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு பணபலன்களுடன் பணி மேம்பாடு (Career Advancement Scheme) அளிக்கப்பட்டு வருகிறது.
 ஆனால், அரசு உதவிபெறும் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, நிதி ஒதுக்கீடு (Fihancial Allocition) செய்யப்படவில்லை' என்ற காரணம் காட்டி, CAS பணியப் பலன்களை, (வாய்மொழி உத்தரவு மூலம்) உயர்கல்வித் துறை நிறுத்தி வைத்துள்ளது. கடந்த இரண்டாண்டுகளாக, இயக்குநரகம் மற்றும் உயர்கல்வித்துறை. இதுகுறித்த தங்களின் செயல்பாடுகளில் மெத்தனம்/பாரபட்சம் காட்டி வருவது குறித்து அரசின் கவனத்தை ஈர்த்திடவும்.
 தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள், ஏயுடி சங்கத்தை சார்ந்த ஆசிரியர்களின், CAS கருத்துருக்களைகோப்புக்களை இணை இயக்குனர் அலுவலகத்துக்கு


பழிவாங்கும் நோக்கில் அனுப்ப மறுக்கும் நிர்வாகத்தினருக்கு, இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பக் கோரியும்,

இணைப் பேராசிரியர் பணியிடம், கல்லூரிகளில், அடிப்படை பதவிகளாக இல்லாத நிலையில், சரியான புரிதல் இன்றி, இதற்கான பணிமேம்பாட்டினை, புதிய பதவி நியமனம் என்று தவறாக புரிந்து கொண்டு. தேர்வுக்குழுநியமன தகுதி ஒப்புதல் கோர, (அரசுக்கல்லூரிகள் தவிர்த்து), தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையினை திரும்பப் பெறக்கோரியும்,

அரசின் கவனத்திற்கு மேற்கண்ட பிரச்சனைகளை கொண்டு செல்ல, சென்னை கல்லூரிக் கல்வி இயக்குனர் அலுவலகம் முன் 28/12/2022 புதன் அன்று மாலை 3 முதல் 5 வரை கோரிக்கை மனு மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நடத்தியது.

இதில் தமிழகத்தில் இருந்து 300 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இப்போராட்டத்தை முன்னாள் தலைவர் பேரா.ஐ. இளங்கோவன் அவர்கள் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

போராட்டத்தை மத்திய பொறுப்பாளர்கள் முன்னின்று நடத்தினர்.

இப் போராட்டத்தின் முடிவில் அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற ஆவண செய்யுமாறு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் இயக்குநர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

Comments