முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு
பொதுமக்களுக்கு அறுசுவை உணவு
சென்னை, அனைத்து மாநகராட்சி- நகராட்சி அண்ணா பொது ஊழியர்கள் சங்கம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் அவரின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் இச் சங்கத்தின் கௌரவ தலைவர் துரைக்கருணா, தலைவர் மோகன் பாபு, செயலாளர் பூங்கா நகர் பிரான்சிஸ், செயலாளர் குணசேகரன், மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்கள் வேளாங்கண்ணி, ரமணம்மா, எங்கம்மா, உள்ளிட்ட உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
மேலும் இந் நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
Comments
Post a Comment