ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியாவின் அமாங் திஸ்டார்ஸ்- விண்வெளி குறும்படம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டு
ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியாவின்
அமாங் திஸ்டார்ஸ்- விண்வெளி குறும்படம்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டு
சென்னை, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்பது ஒரு இந்திய விண்வெளி நிறுவனமாகும், இது சிறிய
செயற்கை கோள்கள், விண்கலங்கள் மற்றும் தரை அமைப்புகளின் வடிவமைப்பு,
உருவாக்கம் மற்றும் ஏவுதலில் முன்னோடியாக உள்ளது.
கல்வி, ஆராய்ச்சி மற்றும்
தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விண்வெளிக்கு பொருளாதார
மற்றும் நிலையான அணுகலை வழங்குவதே எங்கள் குறிக்கொள். 7+ வருட
அனுபவத்துடன், 18+ பலூன்சாட்கள், 3 சப்-ஆர்பிட்டல் பேலோடுகள் மற்றும் 4
ஆர்பிட்டல் செயற்கைக்கோள்களை ஏவியுள்ளோம்.
அமாங் திஸ்டார்ஸ்- விண்வெளி குறும்படம் - சுருக்கம்
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, தேசிய அறிவியல் தினத்தின் இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில்
இளைய தலை முறையினரிடையே விண்வெளி நோக்கிகய ஆர்வத்தை உருவாக்கும்
“அமாங் தி ஸ்டார்ஸ்’ அறிவியல் புனை கதை குறும்படத்தை பெருமையுடன்
வழங்குகிறது. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா எப்போதும் இளைய தலை முறையினருக்கு
விண்வெளியை நோக்கி புரிதலை கொண்டு வர கடுமையாகப் பாடுபடுகிறது.
இந்தக் குறும்படம் சென்னையைச் சேர்ந்த 25 வயதான கட்டிடக் கலைஞரும்
திரைப்படத் இயக்குனருமான ஜே .எம். சேதுராமலிங்கத்தால் இயக்கப்பட்டது,
அறிவியல் புனை கதை , திரைப்படங்கள் மற்றும் நாவல்கள் மீதான அவரது ஆர்வம்
இக்குரும்படத்தை உருவாக்க உதவியது. ஒரு சிறந்த உலகம் மற்றும் எதிர்கால
சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற என்னதை மக்கள் மனதில் விதைக்க
வேண்டும் என்ற நோக்கத்துடன், பெருந்தொற்று காலத்தில் சேதுராமலிங்கம் 3D
அனிமேஷனில் அறிவியல் புனை கதை குரும்படமாக 'அமாங் தி ஸ்டார்ஸ்' ஐ
இயக்கினார்.
இந்தியாவின் 17வது மும்பை சர்வதேச திரைப்பட விழா, கேரளாவின்
14வது சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழா மற்றும் தாகூர் சர்வதேச
திரைப்பட விழா கொல்கத்தா உட்பட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம்
திரையிடப்பட்டுள்ளது. இந்தியாவின் கோவாவில் நடக்கும் மதிப்புமிக்க 53வது
சர்வதேச திரைப்பட விழாவில், "75 கிரியேட்டிவ் மைண்ட்ஸ் ஆஃப் டுமாரோ என்ற
தேசிய விருதையும் சேதுராமலிங்கம் பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்
கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தின் துணைத் தூதரும்
இயக்குநருமான ஜெனடி ரோகலேவ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும்,
இந்நிகழ்ச்சியில் கல்வி உளவியலாளர் டாக்டர் சரண்யா ஜெயக்குமார், சுற்றுச்சூழல்
ஆர்வலரும் அரசியல்வாதியுமான பத்மப்ரியா மற்றும் நடிகரும் வீடியோ
ஜாக்கியுமான வி.ஜே .கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விண்வெளிக் குறும்படமான "அமாங் தி ஸ்டார்ஸ்" ஆங்கிலம் மற்றும் தமிழ்
மொழிகளில் வெளியிடப்பட்டது, விண்வெளியில் கல்வியறிவு பெற்ற
தலை முறையை உருவாக்கும் நோக்கத்தை அடைவதற்கான மற்றொரு படியாகும்.
இந்தத் திரைப்படம் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ YouTube சேனலான www.youtube.com/@spacekidzindia215 இல் வெளியிடப்படும்.
Comments
Post a Comment