விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி மற்றும் தமிழர் விடியல் கட்சி சார்பில்
கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னை:
பூர்வகுடி தமிழர்களான அருந்ததியர் மக்களை வந்தேறிகள் எனவும், அவர்களை தூய்மை பணியை செய்வதற்காகவே ஆந்திராவிலிருந்து வரவழைக்கப்பட்டார்கள் என அம்மக்களை இழிவுபடுத்தி, ஒற்றுமையாக உள்ள தமிழர்களை சாதியாக பிரித்து தமிழர், கன்னடர், தெலுங்கர் என வகைப்படுத்தி சாதி மோதலை உருவாக்க முயற்சிக்கும் சீமானை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி மற்றும் தமிழர் விடியல் கட்சி சார்பில்
அருந்ததிய தமிழர்களை இழிவுப்படுத்திய சீமானை கண்டித்து கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூர் இராஜரத்தினம் மைதானம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்
விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்கள் தலைமையிலும், தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் இளமாறன் அவர்கள் முன்னிலையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
மேலும் இந்த எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டத்தில் யார் தமிழன் என்று சொல்ல சீமானுக்கு என்ன அருகதை இருக்கிறது என்றும்,
தமிழர்களைப் சாதிரீதியாக பிரிக்கும் சீமான் தமிழ் தேசிய இனத்தின் எதிரியே என்றும்,
அருந்ததியர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வெறுப்பை பரப்பும் சீமானை கைது செய்ய வேண்டும் எனவும்,
அதியமான் வழி வந்த பரம்பர் குடி அருந்ததியர்களை அந்நியர் என்று சொல்லும் சீமானை வன்மையாக கண்டிக்கிறோம்
என்றும் முழக்க கோஷங்கள் எழுப்பட்டது.
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாடத்தில்
பிரவீன்குமார், ஒருங்கிணைப்பாளர்-
மே 17 இயக்கம்,
தோழர் பேரறிவாளன், பொதுச் செயலாளர்_
தமிழ்ப்புலிகள் கட்சி,தோழர் தபசி குமரன், தலைமை நிலைய செயலாளர்- திராவிடர் விடுதலை கழகம்,
தோழர் குமரன், சென்னை மாவட்ட செயலாளர்_ தந்தை பெரியார் திராவிடர் கழகம்,
தோழர் சுந்தரமூர்த்தி, தலைவர்-
தமிழர் விடுதலை கழகம்,தோழர் காசி. புதியராஜா, தமிழ்நாடு இளம் வழக்கறிஞர்கள் சங்கம்,
தோழர் தமிழா தமிழா பாண்டியன்,
மூத்த பத்தரிக்கையாளர்,தோழர் மைனர் மணி,
U2 Brutus, ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாடத்தில் தமிழர் விடியல் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சந்தானராஜ், விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் தோழர் கந்தன், செய்தி தொடர்பாளர் சைலேந்தர், சென்னை மாவட்ட மாணவர் பாசறை பொறுப்பாளர் தோழர் வேலு, செங்கல்பட்டு மாவட்ட மாணவர் பாசறை பொறுப்பாளர் தோழர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் திறளாக கலந்துக்கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
Comments
Post a Comment