கோவூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் கலாச்சார விழா

கோவூர் புனித வளனார் கலை மற்றும் 
 அறிவியல் கல்லூரி சார்பில் கலாச்சார விழா
சென்னை, அறிவியல் கல்லூரியின்
முதுகலை சமூகப்பணித் துறை சார்பில் காவோட்
மிகாவீன்-2K23 கலாச்சார விழா! 
கோவூர்:புனித  வளனார்  கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்
முதுகலை சமூகப்பணித் துறை சார்பில்  காவோட்
மிகாவீன்-2K23 என்கிற பிரமாண்ட கலாச்சார நிகழ்ச்சி கல்லூரி வளாகத்திலுள்ள முத்தையா அரங்கத்தில் நடைப்பெற்றது. 
இந்நிகழ்வில்  
இந்திய சமுதாய நல்வாழ்வு அமைப்பின்(ICWO) நிறுவனரும், செயலருமான
ஏ.ஜே.ஹரிஹரன் மற்றும் ஈ.வி.பி(EVP) சினிமாஸ் பொது மேலாளர் கே.கிரண் ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். 

மேலும் இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.ரூபன், 
நிர்வாகி  ரெவ். சீனியர்.ஆர் ரீசல் ஆகியோர் தலைமை வகித்தனர். சமூகபணித்துறைத் தலைவர் பி.வினிதா முன்னிலை வகித்தார். 

மேலும் இந்நிகழ்வில் MIME (இனவெறிக் குறித்த சமூக விழிப்புணர்வு),வீதி நாடகம், பாரம்பரிய நடனங்கள்,சிலம்பாட்டம்,முக ஓவியம் உள்ளிட்டவைகள் நடைப்பெற்றது. 

இந்நிகழ்வில் அம்பேத்கர் கல்லூரி, பேட்ரிஷியன் கல்லூரி, அண்ணா ஆதர்ஷ் கல்லூரி, இந்து கல்லூரி, மார்க் கிரகோரிஸ் உள்ளிட்ட கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டினர். 

இறுதியாக கல்லூரிகளுக்கிடையேயான நடைப்பெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை சான்றிதழ்,கேடயம் மற்றும் கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Comments