சாலை விதிமுறைகள் குறித்துகலந்தாலோசனை கூட்டம்

சாலை விதிமுறைகள் குறித்து போக்குவரத்து காவல்துறையினர் வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாம்! 
சென்னை :
மயிலாப்பூர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட ராயப்பேட்டை,திருவல்லிக்கேணி, கோட்டூர்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் போக்குவரத்து காவல் அதிகாரிகள் போக்குவரத்து சம்பந்தப்பட்ட குறைகள் குறித்து கலந்தாலோசனை கூட்டம் ராயப்பேட்டையிலுள்ள நல்வாழ்வு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு வந்திருந்த வணிகர் சங்க பிரதிநிதிகளை ராயபேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெ. சகாதேவன் அவர்கள் வரவேற்றார். இக்கூட்டத்தின் நோக்கம் குறித்து மயிலாப்பூர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ஜெ.சிவக்குமார் அறிமுக உரையாற்றினார்.


திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத் தலைவர் வி.பி.மணி,மயிலாப்பூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் சந்திரசேகர் உள்ளிட்ட ஐஸ் ஹவுஸ் வியாபாரிகள் சங்கம் , கோட்டூர்புரம் வியாபாரிகள் சங்கம், மயிலாப்பூர் வியாபாரிகள் சங்கம், ராயப்பேட்டை வியாபாரிகள் சங்கம், அபிராமபுரம் வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்துக்கொண்டு தங்கள் பகுதியின் போக்குவரத்து குறைகளை எடுத்துக்கூறி தீர்வு காண கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் கிழக்கு மண்டல துணை கமிஷனர் சமை சிங் மீனா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு போக்குவரத்து பிரச்சனைகள் குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும் பேசினார்.

மயிலாப்பூர் நெடுஞ்சாலையில் அங்கீகரிக்கப்படாத வாகனங்களை நிறுத்துவதைத் தடுக்க ரோந்து வாகனங்களை இயக்கிடவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக மயிலாப்பூர்,ராயப்பேட்டை,திருவல்லிக்கேணி பகுதிகளில் பணியாளர்களை நியமிப்பதாகவும் கூறினார்.


இதேபோல், கோட்டூர்புரம்,மயிலாப்பூர், மெரினா கடற்கரை, ராயப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை நிறுவவும், மாநகராட்சி மூலம் வேகத்தடைகள் அமைக்கவும், பீட் போலீஸார் மூலம் தொடர்ந்து ரோந்து பணி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

வியாபாரிகள்,பொதுமக்களிடம் பெறப்படும் குறைகள் மற்றும் ஆலோசனைகளின் பட்டியலைத் தொகுத்து, போக்குவரத்து போலீசார் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதற்காக அதை முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர், சிசிடிவி கேமராக்களை அனைத்து வணிக நிறுவனங்களும் பொருத்த கேட்டுக்கொண்டார்.

Comments