அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்!

அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்! 
சென்னை:
இ.பி.எஸ்-95 (EPS 95) அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின்
16 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் கருத்தரங்கம் சென்னை, வேப்பேரி, பி.கே.என்.பள்ளி வளாக
அரங்கத்தில் இ.பி.எஸ்-95 (EPS 95) அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின்
தலைவர் கே. கனகராஜ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. 
இச்சங்கத்தின்பொதுசெயலாளர் நடன சிகாமணி அவர்கள் 
வரவேற்புரையாற்றினார். 

மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும், தொ.மு.ச. பேரவையின்பொது செயலாளருமான எம். சண்முகம், 
ஐ.என்.டி.யு.சி-
(டி.என்.சி.எஸ்.சி)மாநில பொது செயலாளர் கா.இளவரி, 
எல்.டி.யு.சி  துணைத்தலைவர்
ஈ.சண்முகவேலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் சிறப்புரையாற்றினர். 
மேலும் இந்நிகழ்வில் பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளான முத்துக்குமாரசுவாமி, எம். சோமசுந்தரம், பார்த்தசாரதி, பன்னீர் செல்வம், ஞானசேகரன், எஸ்.கே.மாறன், நடராஜன், 
சிவசண்முகநாதன்,பரமசிவம், 
செந்தூர்பாண்டியன்,  விஜயகுமார், 
தியாகராஜ ராவ், கே.வேணுகோபால், 
பி.வடிவேலு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஓய்வூதியர்கள் 500க்கும் மேற்பட்டோர் திறளாக கலந்துக்கொண்டனர். சங்க பொருளாளர் எஸ்.சேரன்
நன்றியுரையாற்றினார்.

Comments