சென்னையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

 சென்னையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
சென்னை, சென்னை உயர் நீதிமன்ற வளாக ஆவின் நுழைவாயிலின் முன்பாக வழக்கறிஞர் விஜயகுமார் தலைமையில் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுவதாகவும்,
அவர் ஏற்றுக்கொண்ட அரசியல் சட்ட உறுதிமொழிக்கு மாறாக செயல்படுவதாகவும்,
ஆளுநரின் பல சர்ச்சை பேச்சுக்கள் மற்றும் அவருடைய நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் பல குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவும்,
தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் மக்கள் நல திட்டங்கள் நிறைவேற மாநில அரசிற்கு உதவி புரியாமலும்,
சட்டசபையில் நிறைவேற்றிய பல சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமலும் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார் என பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல கட்சிகளை சார்ந்த வழக்கறிஞர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Comments