ச.பரமசிவம் பிறந்த நாள் விழா
சென்னை,தி.மு.க. அண்ணாநகர் வடக்கு பகுதி கழகச் செயலாளரும் ஆவின் தொ. மு. ச மாநில பொதுச்செயலாளரும்,இரயில்வே தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கி தொழிலாளர்கள்தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளருமான, மனிதநேயர் ச.பரமசிவம் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் வெகு விமரிசையாக நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் கட்சிக்காரர்கள் இணைந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
திமுக கட்சியை சேர்ந்த மாவட்ட அமைப்பாளர்கள்,வட்டச்செயலாளர்கள்,இளைஞரணியினர்,மகளிரணியினர்,பொறியாளர் அணி,வழக்கறிஞர்கள், தொண்டர
ணியினர்,கீழ்ப்பாக்கம் கோவில் கமிட்டி நிர்வாகிகள், தொ.மு.ச நிர்வாகிகள், இரயில்வே ஊழியர்கள்,
நண்பர்கள்,
பொதுமக்கள், சமூக சேவகர்கள் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் உள்ளிட்டோர் திறளாக கலந்துக்கொண்டு பூங்கொத்து கொடுத்தும்,பொன்னாடை போர்த்தியும், ஆளூயுர மலர் மாலை அணிவித்தும், கிரீடம் மற்றும் வெள்ளி வாழ் கொடுத்தும்,பூரண ஆயுள் வேண்டி சிறப்பு பூஜைகள் செய்த அர்ச்சனையை கொடுத்தும், அணிகலன்கள் அணிவித்தும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு மனதார வாழ்த்தி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வில் பிறந்தநாள் விழா நாயகர் பரமசிவம் அவர்கள் துணைவியாருடன் இணைந்து நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கினர்.
Comments
Post a Comment