அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்துகொடுங்கள் சமூக சிந்தனையாளர். செல்வராஜ் வேண்டுகோள்

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்துகொடுங்கள்
சமூக சிந்தனையாளர். செல்வராஜ்  வேண்டுகோள்

சமூக சிந்தனையாளர். செல்வராஜ் கூறிருபதவது, தமிழக அரசுப் பள்ளிகளில்
இன்று முதல் மாணவர் சேர்க்கை அரசு அறிவிப்பு. 
இதில் வேடிக்கை என்னவென்றால். ஏற்கனவே. தனியார் பள்ளிகளில்  25 சதவீத இடங்களில் மாணவர்களை சேர்க்க. ஆன்லைன் பதிவு நடந்துவிட்டது. இந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசு வழங்கும். 

இப்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை. அறிவிப்பு. 

அரசு பள்ளிகளில்  போதிய. கட்டமைப்பு வசதிகள் இல்லை. கழிவறை வசதிகள் இல்லை. கழிவறை இருந்தாலும் தூய்மை யாக இருப்பதில்லை. 
குடிநீர் வசதி இல்லை. போதிய ஆசிரியர்கள் இல்லை. 

இத்தனை இல்லை  களை வைத்துக் கொண்டு. மாணவர் சேர்க்கை.
.
. இந்த வீனாய்ப்போன அரசியல் வாதிகள் நடத்தும் பள்ளிகளில் மாணவர்கள் சேரவேண்டும் என்பதற்காகவே... அரசு பள்ளிகளில் இத்தனை இல்லை கள் உள்ளன. 

இதை மறைப்பதற்காகவே. 
அரசு பள்ளிகளில். காலை உணவு. மாலை உணவு.. 

தமிழ்நாடு அரசும். அன்பில் மகேஷ் பொய்யாமொழியும்.      முதலில் செய்யவேண்டியது

1.அரசுப்பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகளை கமிஷன் வாங்காமல் உருவாக்குங்கள்.
 
2. அனைத்து பாட திட்டங்களுக்கும் போதுமான ஆசிரியர் களை நியமனம் செய்யுங்கள்.
 
3. பகுதி நேர. யோகா. மன வளக்களை ஆசிரியர் களை கௌரவமான ஊதியத்
தில் நியமனம் செய்யுங்கள். 

4.மாணவர்கள்.ஆசிரியர்களுக்கு சரியான கழிவறை வசதி. தண்ணீர் வசதியை ஏற்படுத்தித் தாருங்கள். 

5. மாணவ மாணவியருக்கு. பொதுவான விழிப்புணர்வை ஏற்படுத்தி.. ஆசிய.ர் மாணவரிடையே நல் உறவை ஏற்ப்படுத்துங்கள்
.
6.பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஆசிரியர் களின் கல்விதகுதிகளைரத்துசெய்து. வாழ்நாள் சிறை தண்டனை அளிக்க சட்டமன்றத் தில் சட்டம் இயற்றுங்கள். 

7.. படிப்படியாக தனியார் கல்வி நிறுவனங்களை தமிழ் நாட்டில் மூடிய சட்டமியற்ற உங்கள். 

இவையெல்லாம் நடந்தால்
சாதாரண ஏழை மாணவனும்
தரமான உயர்கல்வியை இலவசமாக பெறுவான்.. 

Comments