பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற தீயணைப்பு துறை ஓட்டுநர்கள் , யந்திர கம்மியர் ஒட்டுநர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்,
ஓய்வு பெற்ற தீயணைப்பு துறை ஓட்டுநர்கள் மற்றும் மெக்கானிக் ஆகியோருக்கு ஒரே மாதிரியான ஊதிய விகிதம் வழங்கிட வேண்டும்,
தீயணைப்பு துறையில் அரசாணை எண் -162 இன் படியும், நீதிமன்ற உத்தரவின் படியும் ஊதிய விகிதம் ரூ.2800 ஐ ரூ 4200 ஆக உயர்த்தி தர வேண்டும் ,கடந்த 15 வருடங்களாக போராடிவரும் தங்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments
Post a Comment