தமிழ்நாடு அரசு R.C.H. தூய்மை
பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சென்னை, தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தூய்மையாக வைத்திருக்கவும் . மருந்துவர்கள் சொல்லும் அனைத்து வேலைகளை செய்வதற்கும் பிரசவத்தின் போது மருத்துவர். செவிலியர்களுக்கு உதவி புரிந்தும், பின் பிரசவ அறையை தூய்மைபடுத்தவும் ஒரு நிலையத்திற்கு இருவர் வீதம் 3140 நூய்மை பணியார்கள் 2008 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ 500/-ம் 5 ஆண்டுகளுக்கு பிறகு ரூ1000/-ம், 7 ஆண்டுகள் பணி முடித்திருந்தாலோ அல்லது மாதம் 10 பிரசவங்கள் நடைபெற்றிருந்தாலோ மாத தொகுப்பூதியம் ரூ.1500/- வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் தினந்தோரும் 12 மணி நேர வேலை பார்க்கின்றனர், இவர்களுக்கு வார விடுப்பு. பண்டிகை விடுப்பு . நோய் விடுப்பு என எந்த விதமான அரசு விடுமுறைகளும் கிடையாது. 365 நாட்களும் வேலை நாட்களே.
டாக்டர்.கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது 2010 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில் அரசாணை எண:: 385 நிதி (ஊதியப்பிரிவுப் துறை நாள் 01.10.2021-ல் அரசு அலுவலகங்கள் சார்பு அலுவலகங்களில் தினக்கூலி. தொகுப்பூதியத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் அவர்களை சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்யலாம் என ஆணையிட்டார். இன்றுவரையிலும் இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இவர்களுக்கு அரசு ஆணை எண்பு [டி] 792 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை (ஏபி) நாள்: 05.04.2017-ன் படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நிர்ணயம் செய்யும் தினக்கூலியை
வழங்கலாம் என்கிறஅரசாணையின் படியும் இன்று வரை தினக்கூலி வழங்கப்படவில்லை. மாண்புமிரு.தமிழ்நாடு முதல்வர் அவர்களின் மகளிருக்கு அரசு நகர பேருந்துகளில் இலவச பயணம்,மற்றும் மாதாந்திர உரிமைத்தொகை போன்ற திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம். அதேபோல தமிழ்நாடு அரசின் குறைந்தபட்ச கூலி நிர்ணய சட்டத்தின்படியும் இவர்களுக்கு தினக்கூலி வழங்கப்படவில்லை R.C.H.தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் நிர்ணயம் செய்யும் தினக்கூலி அனைவருக்கும் வழங்கப்படவேண்டும். R.C.H.தூய்மை பணியாளர்களை காலியாக உள்ள பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் காலி பணியிடங்களில் பணி நியமனம் செய்ய பரிந்துரை அடிப்பையில் பணி நியமனம் செய்தி வேண்டும்.
மிகக்குறைந்த ஊதியத்தில் வாழ்க்கையை நடத்தும் R.C.H.தூய்மை பணியாளர்களில் பெரும்பாலானோர் பெண்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கிறவர்கள் குறிப்பாக பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. எனவே கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Comments
Post a Comment