தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடசென்னை மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்ட தலைவர் பெரோஸ் கான் தலைமையில் நடைபெற்றது, சமீபத்தில் வெளியான கேரளா ஸ்டோரி, வெளியாக உள்ள
பர்ஹானா, ஏற்கனவெ வெளியாகி கண்டனங்களை பெற்ற புர்கா போன்ற திரைப்படங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும்
என்பதை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தின் மாநில துணைத்தலைவர் E.பாருக் அவர்கள் கண்டன உரை ஆற்றினார்கள், அவர் தமது உரையில்
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை அறியாத நிலையில் சிலரும், இஸ்லாமியர்களின் மீது அவதூறு பரப்புவதன்
மூலம் சமூக ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கிலும் சங்க பரிவார அமைப்புகளை சார்ந்தவர்களின் உந்துதலோடு
சமீபகாலமாக பல படங்கள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக கேரளா ஸ்டோரி என்று நேற்று வெளியான திரைப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் என்று சொல்லப்பட்டு
மிகப்பெரும் பொய்யை மக்கள் மத்தியில் பதிய வைக்கிற முயல்கிறது, நாசிக்களின் அடியொட்டி செயல்படும் சங்க பரிவாரங்கள்
நாசி அமைப்பை சார்ந்த கோயபல்ஸின் தத்துவமான தொடர் பொய் உண்மையாக நம்பப்படும் எனும் அடிப்படையில் ஒரு பெரும் பொய்யை
கட்டமைத்துள்ளனர். 32000 பேர் ஆப்கானிஸ்தான் சென்றார்கள் இஸ்லாமியர்களாக கட்டாயப்படுத்தி மாற்றப்பட்டார்கள் என்று சொல்லி
உள்ளனர், அந்த 32000 பேர் யார் என்பதை இந்த பொய்யர் கூட்டம் சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
கர்நாடகா தேர்தலில் வெற்றிபெற முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் பாஜக மதவாத ஓட்டுக்களை ஒன்று சேர்க்க இந்த கேரளா
ஸ்டோரி திரைப்படத்தை பயன்படுத்தி கொள்கிறது என்றார், மேலும் புர்ஹா , பர்ஹானா படங்களில் இஸ்லாமிய பெண்களின் உரிமைகள்
பறிக்கப்படுவது போன்று சித்திரத்தை உருவாக்க முயற்சிக்கினறனர், இந்த படத்தை எடுத்தவர்களோடு பொது மேடையில் விவாதத்திற்கு
தயார் என்றும் அவர்கள் வைத்த கருத்து அபத்தமானது, அரைவேக்காட்டுத்தனமானது சமூக பதட்டத்தை ஏற்படுத்தக்கூடியது
என்று கூறினார்.
ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் எழுச்சியுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர், இளைஞர்கள், முதியவர்கள்
என்ற பேதமின்றி தங்களின் எதிர்ப்பை ஜனநாயக ரீதியாக பதிவு செய்தனர், மக்களின் குரலுக்கு மதிப்பளித்து இந்த படங்கள் தடைசெய்யப்பட
வேண்டும் என்றும் தங்கள் கருத்தை பதிவு செய்தனர்.
இந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் அடுத்த ஒருமாத காலத்திற்கு பொது மக்களை நேரடியாக சந்தித்து இந்த அவதூறுகளை
களையும் வண்ணம் பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். எழுச்சிமிக்க கோஷங்களோடு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்
நன்றியுரையை தென் சென்னை மாவட்டத்தலைவர் பயாஷ் அவர்கள் நிகழ்த்தினார், மாநில பொருளாளர் A.இப்ராஹிம், மாநிலச்செயலாளர்கள்
A.சித்திக், I.அன்சாரி, யாசர், N.அல் அமீன் மாவட்ட செயலாளர் அன்சாரி பொருளாளர் முஸ்தாக் துணை தலைவர் காஜா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர், இந்த நிகழ்ச்சியை வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்
எழுச்சியோடு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் முடிந்து மக்கள் அமைதியாக களைந்து சென்றனர்.
Comments
Post a Comment